புளியரை பகுதியில் வரும் 16ஆம் தேதி மாபெரும் சாலை மறியல்: கோட்டாட்சியர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியானதால் அறிவிப்பு!

author img

By

Published : May 13, 2022, 10:53 PM IST

புளியரைப் பகுதியில் சமூக அமைப்பினர் சாலை மறியல் : கோட்டாச்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

தென்காசியில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி காரணமாக கேரளாவிற்கு விதிமீறி கொண்டு செல்லப்படும் கனிம வளத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற 16ஆம் தேதி புளியரையில் திட்டமிட்டபடி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாக சமூக அமைப்பு சார்பில் அறிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு மணல், ஜல்லி, குண்டுக்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் நாள்தோறும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கனிம வளங்கள் முறைகேடாக கொண்டு செல்லப்படுவதாகக் கூறி, சமூக அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் வருகின்ற 16ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளாதாக அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று(மே 13) கோட்டாட்சியர் கங்காதேவி தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்து ஆணையர் ஆகியோர் முன்னிலையில் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

புளியரைப் பகுதியில் சமூக அமைப்பினர் சாலை மறியல்: கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

பேச்சுவார்த்தையில் கேரளாவிற்கு முறைகேடாக அதிக அளவு கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த வேண்டும், கனிம வளங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் கிராமப்புற சாலை வழியாக செல்வதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து, சாலை சேதம் உள்ளிட்டவை ஏற்படும் நிலையில் இதனைக் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில், அலுவலர்கள் தரப்பில் முறையான எவ்வித பதில்களும் வராத காரணத்தினால் திட்டமிட்டபடி புளியரைப் பகுதியில் திரளானவர்களை கூட்டி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என சமூக அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தென்காசி அருகே கல்லூரி கட்டிடம் மீது ஏறி மாணவர்கள் தற்கொலை மிரட்டல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.