அச்சன்கோவிலில் காட்டு யானை மிதித்து ஒருவர் உயிரிழப்பு
Updated on: Aug 30, 2022, 2:12 PM IST

அச்சன்கோவிலில் காட்டு யானை மிதித்து ஒருவர் உயிரிழப்பு
Updated on: Aug 30, 2022, 2:12 PM IST
தமிழ்நாடு கேரள எல்லையான அச்சன்கோவில் பகுதியில் காட்டு யானை மிதித்து ஒருவர் உயிரிழந்தார்.
தென்காசி: தமிழ்நாடு - கேரள எல்லையான அச்சன்கோவிலில் இருந்து புனலூர் செல்லும் சாலையின் இருபுறமும் வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் அவ்வப்போது யானைகள் குறுக்கிடுவது வழக்கம். அந்த வகையில், நேற்று ஒற்றை காட்டு யானை அவ்வழியாக வரும் வாகனங்களை மறித்துள்ளது. இதனால் வாகனவோட்டிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனிடையே துரைப்பாலம் பகுதியில் நடந்து சென்ற ஒருவரை அந்த காட்டு யானை விரட்டி சென்று மிதித்து கொன்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலமை மீட்டுள்ளனர். ஆனால் அவரது அடையாளம் தெரியவில்லை. தற்போது யானை விரட்டும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
இதையும் படிங்க: கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை 12 நாட்களுக்கு பிறகு சிக்கியது
