தென்காசி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு எதிரொலி; பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை

author img

By

Published : May 25, 2023, 8:09 PM IST

Etv Bharat

தென்காசியில் பள்ளி வாகனம் மீது கார் மோதிய பயங்கர விபத்தில் 5 பேர் பலியான நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளதா? என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளியில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி: தென்காசியில் தனியார் பள்ளி வாகனமும் காரும் நேர்க்குநேர் மோதிய கோர விபத்தில் 5 பேர் பலியாகிய நிலையில் கோடை விடுமுறையில் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு வர காரணம் என்ன? சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளதா? என்பன போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளியில் அதிகாரிகள் விசாரணை இன்று (மே 25) மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, பனவடலிசத்திரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்த தனியார் பள்ளி வேனும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. அதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

மேலும், தனியார் பள்ளி வேனில் இருந்த மாணவிகள் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி பனவடலிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஐந்து பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாணவிகள் 4 பேரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்து தென்காசியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கோடை விடுமுறை என்பதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி வாகனத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வந்தது ஏன்? சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவர்கள் வீடு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டதா? பள்ளி வாகனம் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட பள்ளியும் விதிமீறியுள்ளதா? என்பது குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா மற்றும் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி ராமசுப்பு ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, காரும் தனியார் பள்ளி வேனும் நேருக்குநேராக மோதிக்கொண்ட இந்த கோர விபத்தில், நல்வாய்ப்பாக பள்ளி வேனிற்குள் இருந்த பள்ளி மாணவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளி வேனுக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் திடீரென்று நிலைத்தடுமாறி கீழே விழுந்ததை அடுத்து அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பள்ளி வேன் ஓட்டுநர் வேனை திருப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: கார் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்து.. 5 பேர் உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.