சங்கரன்கோவிலில் ஹோட்டலில் கேஸ் கசிந்து விபத்து!

சங்கரன்கோவிலில் ஹோட்டலில் கேஸ் கசிந்து விபத்து!
சங்கரன்கோவிலில் தனியார் ஹோட்டலில் கேஸ் கசிந்து ஏற்பட்ட விபத்து காரணமாக நான்கு பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி: சங்கரன்கோவில் முதல் ராஜபாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் கேஸ் சிலிண்டரில் கேஸ் கசிந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் உணவகத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரிய அளவில் நடைபெற இருந்த விபத்தை தடுத்தனர்.
கேஸ் கசிந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதில் உணவக உரிமையாளர் சரவணகுமார் என்பவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம்
