சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தபசு விழா!

author img

By

Published : Jul 23, 2021, 2:22 PM IST

சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு காவலர்கள் பாதுகாப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று (ஜூலை 23) நடைபெறுவதையொட்டி 400க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி: சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தபசு விழா இன்று (ஜூலை 23) நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் சங்கரலிங்க சுவாமி சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சி அளிக்கும் வைபவம் ஆடித்தபசு நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

நோய்த்தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் 'திருவிழா நிகழ்வில் கூட்டம் கூட அனுமதி இல்லை என்றும், மண்டகப்படி தாரர்கள் தவிர பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை' என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

பாதுகாப்புப் பணியில் காவலர்கள்
பாதுகாப்புப் பணியில் காவலர்கள்

கோயிலில் காவலர்கள் பாதுகாப்பு

இதனையடுத்து இன்று காலையில் ஆலய நுழைவுப் போராட்டம் என்று இந்து முன்னணியினர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இதனையடுத்து பக்தர்கள், இந்து முன்னணியினர் கோயிலுக்குள் நுழைந்தால் தடுக்கும் விதமாக ஏராளமான காவலர்கள் கோயில் நுழைவு வாயில் முன்பாக குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயில் நுழைவு வாயில் முன்பாக குவிக்கப்பட்ட காவலர்கள்
கோயில் நுழைவு வாயில் முன்பாக குவிக்கப்பட்ட காவலர்கள்

இன்று அதிகாலை முதலே 450-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோயிலுக்கு முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஆடி பௌர்ணமி- வழிபாடும் மகிமையும்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.