சிவகங்கை நகராட்சி ஆணையாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

author img

By

Published : May 14, 2022, 6:01 PM IST

சிவகங்கை நகராட்சி ஆணையாளர் தற்காலிக பணியிடை நீக்கம் -அதிரடி உத்தரவு

சிவகங்கை மாவட்ட நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியனை நிர்வாக காரணங்களால் தற்காலிக பணியிடைநீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட நகராட்சி ஆணையாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த ஒரு வருடமாக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று (மே13) நடந்த நகராட்சி நிர்வாக நடவடிக்கைகள் குறித்து, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நடத்திய காணொலி காட்சியில் பங்கேற்றார்.

அப்போது இயக்குனர் அரசு திட்டங்கள் குறித்து சில தகவல்களை சிவகங்கை நகராட்சி ஆணையரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகங்கை நகராட்சி ஆணையாளர் முறையான தகவல்கள் கொடுக்கவில்லை என்று கூறி அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நகராட்சி ஆணையராக தற்போது முதன்மைப் பொறியாளர் பொறுப்பில் உள்ள பாண்டீஸ்வரி என்பவரை நியமித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் நகராட்சி ஆணையர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா அனைவரும் பங்கேற்ற பொது காணொலிக் காட்சியில் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும், தான் பழிவாங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அம்பேத்கர், சிவாஜி கணேசன் மணிமண்டபங்களில் முதலமைச்சர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.