பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணி... அதிருப்தியில் பணியாளர்கள்...

author img

By

Published : Oct 1, 2022, 4:10 PM IST

பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணியாளர்கள் பணி- பணியாளர்கள் புலம்பல்!

சிவகங்கை நகராட்சியில் துய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கடந்த மூன்று மாத காலமாக வழங்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை நகராட்சியில் 27ஆவது வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் தினந்தோறும் குப்பைகளை சேகரிப்பதற்கும் ஆங்காங்கே குவியும் குப்பைகளை அள்ளுவதற்கும் நிரந்தர பணியாளர்களாக 73 பேரும் ஒப்பந்த அடிப்படையில் 133 பேரும் உள்ளனர்.

பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணியாளர்கள் பணி

இவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த மூன்று மாதமாக ஊழியர்களுக்கு கையுறை கூட நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சில இடங்களில் குப்பைகளுடன் பாட்டில்கள் உடைக்கபட்ட நிலையில் உள்ளன. அவைகளை கையினால் அள்ளும் போது கையில் காயங்கள் ஏற்படுவதாக துய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பணியாளர்கள் கேட்டதற்கு தற்போதுதான் ஆர்டர் செய்துள்ளோம், வந்தவுடன் வழங்குவோம் என்று தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க:ஓசி டிக்கெட் வீடியோ விவகாரம்; பாட்டி மீது வழக்கு இல்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.