தரமற்ற ஆடுகள் வழங்கியதாக புகார் - கால்நடைத்துறை மீது கோபத்தில் மக்கள்

author img

By

Published : May 11, 2022, 8:07 PM IST

ஆடு

சிவகங்கையில் கால்நடைத் துறை சார்பாக தரமற்ற ஆடுகள் வழங்கப்பட்டதாக பயனாளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவன் இழந்து வாழ்வோரின் வருமானத்திற்காக பயனாளிகளை தேர்வு செய்து கால்நடைத்துறை சார்பில் 5 ஆட்டுக்குட்டிகளையும் , பராமரிப்பு செலவிற்கு ஆயிரம் ரூபாயையும் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

சிவகங்கை: இந்த நிலையில் சிவகங்கை அரசு கால்நடை மருத்துவமனையில் சிவகங்கை வட்டாரத்திற்கு உட்பட்ட 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா 5 ஆட்டுக்குட்டிகள் அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இதில் விதிமுறைகளுக்கு மீறி ஒரே வியாபாரியிடம் அனைத்து பயனாளிகளுக்கும் ஆட்டுக்குட்டிகள் வழங்கப்பட்டதுடன் அவை தரமற்று இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கோபமடைந்த சில பயனாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அரசு வழங்கும் நிதிக்கு தரமான ஆட்டுக்குட்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

சிவகங்கையில் தரமற்ற ஆடுகள் வழங்கியதாக புகார்

இதையும் படிங்க: அதியசத்த பாருங்களேன்!.. தினமும் கோயிலில் மணி அடிக்கும் ஆட்டுக்குட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.