பறவை அவதானிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: பறவை ஆர்வலர்கள் பங்கேற்பு!

author img

By

Published : Nov 28, 2020, 10:23 AM IST

பறவை அவதானிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம்: உத்தமசோழபுரத்தில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பாக நடைபெற்ற பறவை அவதானிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பறவை ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் உத்தமசோழபுரத்தில் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பாக, பறவை அவதானிப்பு குறித்த ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பறவைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஆசிரியர், மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சேலம் பறவையியல் கழகம் வழங்கிய கருத்தரங்கில் பறவைகள் குறித்த பல்வேறு ஆச்சரியமூட்டும், தகவல்களை அளித்தனர். பறவை அவதானிப்பு எப்படி தொடங்கப்பட வேண்டும், பறவைகளின் வாழ்வியல், அதனால் மனித குலத்திற்கும், இயற்கைக்கும் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்டவைகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், கல்வியாளர்கள் கேட்ட சந்தேகங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். இதனால், மாணவர்களின், கவனத்திறன் மேம்படுவது மட்டுமல்லாமல் அவர்களின் கல்வி திறனும் பறவைகள் அவதானிப்பு மூலமாக அதிகரிப்பது ஆய்வு மூலம் நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கல்வியாளர்கள், முனைவர் செல்வம், பறவையியல் ஆர்வலரும் கிருஷ்ணமுத்தூர் பள்ளி தலைமையாசிரியருமான செந்தில் குமார், சேலம் பறவையியல் கழக நிறுவனர் கணேஷ்வர், விலங்கின புகைப்பட ஆர்வலர் ஏன்ஜெலின் மெனோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்திய அளவில் பறவைகள் அவதானிப்பில் முதலில் இருந்த கேரளாவை, பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் தமிழ்நாடு அதுவும் சேலம் மாவட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காயம் காரணமாக ஒற்றைக் காலில் நின்ற தேசியப்பறவை - சிகிச்சை அளித்த வனத்துறையினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.