முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிப்பட்டறை - ஆர்வத்துடன் மக்கள் பங்கேற்பு

author img

By

Published : Sep 9, 2022, 3:00 PM IST

முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி பட்டறை நடைபெற்றது

சேலத்தில் முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், கண்காட்சி மற்றும் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. முயல் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பல வகையான தொழில்நுட்பப் பயிற்சியும் வழங்கப்பட்டது.

சேலம்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் முயல் வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான கண்காட்சி மற்றும் பயிற்சிப்பட்டறை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்றது.

இதில் நியூசிலாந்து வெள்ளை ஒயிட் ஜெயன்ட், சோவியத் சின்சில்லா, கிரேஜெயன்ட் டச்சு போன்ற உலகப் பிரபலமான முயல்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.

சிறிய மற்றும் பெரிய ஆண், பெண் முயல்களுக்கான கூண்டுகளும் தண்ணீர் மற்றும் தீவன கலன்களும், அடர் தீவனத்தில் முயல்களுக்குத் தேவையான குச்சி தீவனங்களும், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கால்நடை வளர்ப்புக்குத் தேவையான தீவனப்பயிர்கள் கோ 4 கோ 5 வேலி மசால், முயல்மசால் போன்ற பயிர்களும் அதற்கான விதைகளும் தீவனப்பயிர்களை நறுக்கக்கூடிய உபகரணங்களும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.

முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிப்பட்டறை - ஆர்வத்துடன் மக்கள் பங்கேற்பு

முயல் இறைச்சியில் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகளால் ஆன முயல் சூப், மொமோஸ் போன்றவைகளும் கண்காட்சி அரங்கில் இடம்பெற்று இருந்தது. இந்த கண்காட்சியில் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக வந்திருந்து கலந்துகொண்டு பயிற்சி பெற்று சென்றனர்.

மேலும் முயல்களைப் பார்த்து முயல்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: காவிரி ஆற்றின் அருகில் செல்ஃபி எடுக்கத் தடை - சேலம் மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.