பாலாற்றில் 1500 கன அடி நீர் வருகை - பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ராணிப்பேட்டை கலெக்டர்

author img

By

Published : Dec 12, 2022, 3:19 PM IST

Etv Bharat

சுமார் 1500 கனஅடி நீரானது பாலாற்றில் வந்து கொண்டிருப்பதால் ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் பாலாற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் புல்லூர் தடுப்பணை தாண்டி வெள்ளநீரானது ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், அதேபோல வேலூர் மாவட்டத்தில் இருந்து மோர்தான அணை மற்றும் அகரமாறு மற்றும் கிளை ஆறுகளில் இருந்தும் பாலாற்றில் கலக்கிறது. அங்கிருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அணைக்கட்டு பகுதிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.

பிற்பகல் நிலவரப்படி சுமார் 1500 கனஅடி நீர் பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது. இந்த மழை நீர் முழுவதும் பாலாற்றிலேயே காஞ்சிபுரம் நோக்கி அனுப்பப்படுகிறது. மேலும், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருவதால் பாலாற்றில் அதிக கனஅடி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பாலாற்றில் இறங்க வேண்டாம் எனவும்; பாலாற்றங்கரையோரம் மக்கள் குழந்தைகள், இளைஞர்கள் வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.