ETV Bharat / state

பொதுப்போக்குவரத்து மூலம் இளைஞர்கள் இந்தியா முழுவதும் பயணம் - காரணம் என்ன?

author img

By

Published : Aug 3, 2021, 7:45 PM IST

Updated : Aug 3, 2021, 7:56 PM IST

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற இரண்டு இளைஞர்கள் புதுச்சேரியிலிருந்து இருந்து பொதுப்போக்குவரத்து ஊர்திகளான ரயில், பேருந்து மூலம் இந்தியா முழுவதும் பயணம் செய்து ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.

பொது போக்குவரத்து மூலம் இளைஞர்கள் இந்தியா முழுவதும் பயணம்
பொது போக்குவரத்து மூலம் இளைஞர்கள் இந்தியா முழுவதும் பயணம்

ராமநாதபுரம்: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சுற்றுலா துறையின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் திலீபன் மற்றும் அவரது நண்பர் ஆடம்சன் ஆகியோர் பொதுப்போக்குவரத்து சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளனர்.

பிப்ரவரி 7ஆம் தேதி புதுச்சேரியிலிருந்து இருந்து இருவரும் புறப்பட்டு இந்தியா முழுவதும் பொதுபோக்குவரத்து ஊர்திகளை( ரயில், பேருந்து, விமானம்) பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் வந்து தங்களின் பயணத்தை நிறைவு செய்தனர்.

இந்தியா முழுவதும் பயணம்

பொதுப்போக்குவரத்து மூலம் 23 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களுக்கு 43 ரயில்கள், 34 பேருந்துகள், 8 விமானங்களில் 35 ஆயிரத்து 583 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவரும் பயணம் செய்துள்ளனர்.

புதிய சாதனை

இதுகுறித்து திலீபன் கூறியதாவது, "ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி 29 ஆயிரத்து 119 கிலோ மீட்டர் தூரத்தை பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி கடந்து உலக கின்னஸ் சாதனைப் புரிந்துள்ளனர். தற்போது 35 ஆயிரத்து 583 கிலோ மீட்டர் தூரத்தை பொதுப்போக்குவரத்து மூலம் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளோம்.

பொது போக்குவரத்து மூலம் இளைஞர்கள் இந்தியா முழுவதும் பயணம்

உலக சாதனைக்கு வாய்ப்பு

பிப்ரவரி முதல் வாரத்தில் கரோனா ஊரடங்கு காரணமாகப் பயணம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஜூலை 16ஆம் தேதி பயணத்தை மீண்டும் தொடங்கி தற்போது நிறைவு செய்துள்ளோம்.

இந்தப் பயணத்தில் டெல்லி, ஆக்ரா, அமிர்தசரஸ், சிம்லா, வாரணாசி, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய இடங்களுக்குச் சென்றோம். அதற்கான ஆதாரங்களை திரட்டி தற்பொழுது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உலக சாதனை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து - உயர் நீதிமன்றம் அதிரடி

Last Updated : Aug 3, 2021, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.