ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயில்

author img

By

Published : Aug 5, 2022, 9:32 PM IST

Introduction of special train number changes between Rameswaram - Hubli

ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே வாராந்திர சிறப்பு ரயிலை எண் மாற்றங்களுடன் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07355) ஹூப்ளியில் இருந்து ஆகஸ்ட் 6 முதல் செப்டம்பர் 24 வரை சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு இராமேஸ்வரம் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (07356) ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 25 வரை ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பென்னுரு, ஹரிஹார், தேவனஹரி, சிக் ஜாஜுர், பிரூர் அரிசிகரே, தும்கூர், யெஸ்வந்த்பூர் (பெங்களூர்), பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் - ஹைதராபாத் ரயில் எண்களில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.