காதலுக்காக கடல் கடந்து வந்த காதலி - புதுக்கோட்டையில் இனிதே நடந்த திருமணம்!
Published: Jan 26, 2023, 10:54 PM


காதலுக்காக கடல் கடந்து வந்த காதலி - புதுக்கோட்டையில் இனிதே நடந்த திருமணம்!
Published: Jan 26, 2023, 10:54 PM
Hong Kong Girl Married Tamil Boy: புதுக்கோட்டை அடுத்து அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் பகுதியை சேர்ந்த காத்தமுத்து (எ) மணிகண்டனை ஹாங்காங் செல்சீ திருமணம் செய்துகொண்டார்.
Hong Kong Girl Married Tamil Boy:புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர், முனியாண்டி. இவரது மனைவி உமா. இவர்களது மகன் காத்தமுத்து(எ)மணிகண்டன். இவர் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணி செய்து வந்துள்ளார். பின்னர் கடந்த 2 ஆண்டு காலமாக ஹாங்காங்கில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது, காத்தமுத்து(எ)மணிகண்டனுக்கும் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த அலார்கான் - செரில் தம்பதியரின் மகள் சென் (எ) செல்சீக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர், இந்த காதல் குறித்து மணிகண்டனும் அதேபோல் செல்சீயும் அவரவர் வீட்டில் தெரிவித்துள்ளனர்.
பின்னர், தமிழர்களின் பாரம்பரிய முறைப்படியும் கலாசாரத்தின் முறைப்படியும் மணிகண்டன், செல்சீ திருமணம் நடைபெற வேண்டும் என்று மணிகண்டனின் பெற்றோர் கேட்டுக் கொண்டதன்படி செல்சீயின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இன்று(ஜன.26) புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் உறவினர்கள் புடை சூழ மணிகண்டன் - செல்சீ இணையர்களின் திருமணம் முடிவடைந்த நிலையில் பின்னர், விருந்தோம்பல் நிகழ்ச்சி திருவப்பூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மணிகண்டனையும் செல்சீயையும் மனதார வாழ்த்தினர்.
இதுகுறித்து, மணிகண்டனும் செல்சீயும் கூறுகையில், ஹாங்காங்கில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரியும் பொழுது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் முதலாவதாக மணிகண்டன் அவரது காதலை அவரது வீட்டில் தெரிவித்தபோது அவரது பெற்றோர் தயக்கம் காட்டியதாகவும்; பின்னர், அந்த காதலுக்கு சம்மதம் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.
அதையடுத்து, செல்சீயும் அவரது தாயாரிடம் தெரிவித்து காதலுக்கு சம்மதம் பெற்றதாகவும் தற்போது இருவீட்டாரும் இணைந்து திருமணம் செய்து வைத்தது இருவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினர். மேலும், செல்சீக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும்; தனக்கு இது புது அனுபவத்தை தந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
இதையும் படிங்க:உலகின் முதல் மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்து - இந்தியாவில் அறிமுகம்.!
