துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவனை நலம் விசாரித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

author img

By

Published : Jan 2, 2022, 10:23 PM IST

விளையாட்டு துறை அமைச்சர்

நார்த்தாமலை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவனை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை: நார்த்தாமலை அருகே சிஐஎஸ்ஃப் வீரர்களில் துப்பாக்கிப் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் வழக்கம் போல் வீரர்கள் கடந்த மாதம் 30ஆம் தேதி பயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த சிறுவன் புகழேந்தி தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில், புதுக்கோட்டை அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள சிறுவன் புகழேந்தியை விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவனை சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "சிறுவன் நலமுடன் இருக்கிறான். தேவையென்றால் தனியார் மருத்துவமனையில் உயர் தர சிகிச்சை வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் கட்டாயம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.