திருடுபோன செல்போன்கள் மீட்பு - உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் துறை

author img

By

Published : Mar 1, 2022, 4:34 PM IST

திருடுபோன செல்ஃபோன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

புதுக்கோட்டையில் திருடுபோன செல்போன்களைக் கண்டுபிடித்த காவல் துறையினர், அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை: பொதுமக்களின் செல்போன்கள் திருடுபோன சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கெனவே கடந்த 6 மாதத்திற்கு முன்பாக 120 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் இரண்டாவது முறையாக 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 1) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கலந்துகொண்டு கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தொடர்ந்து செல்போன் திருடுபோன சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சைபர் கிரைம் காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு ஏற்கெனவே ஒரு முறை 120 செல்போன்களையும் தற்போது 60 செல்போன்களையும் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று சைபர் கிரைமில் பல்வேறு வழக்குத்தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இவைகளில் குற்றவாளிகள் மற்ற மாநிலங்களில் சேர்ந்தவர்களாக இருப்பதால் உயர் அலுவலர்களை தொடர்புகொண்டு புதுக்கோட்டை காவல்துறை சார்பில் மற்ற மாநிலங்களுக்குச் சென்று குற்றவாளிகளை கைது செய்யும் பணிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

விரைவில் மற்ற மாநிலங்களுக்குச்சென்று குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். மாவட்டத்தில் திருட்டுச்சம்பவம் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு கிரைம் டீம் தொடங்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து திருடு போன நகைகள் இருசக்கர வாகனங்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு காவல் துறை சார்பில் புதுக்கோட்டை பசுமலைப்பட்டி பகுதியிலுள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு காவல் துறை, மத்திய தொழில் பாதுகாப்புப்படை காவல் துறையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு சிறுவனை தாக்கியுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறுவன் உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தோட்டா, பயிற்சி நேரத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் ஆகியவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

திருடுபோன செல்ஃபோன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
திருடுபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஆய்வு அறிக்கை கிடைப்பதற்கு இன்னும் ஒரு மாத காலம் தேவை என்று அவர்கள் கூறியுள்ளனர். அறிக்கை வந்த பிறகு அந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தப்படும். உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்று அங்கு பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினரை காவல் துறையினர் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியும், அவர்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்குப் பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன” என்றார்.

இதையும் படிங்க: குடிபோதையில் பாலியல் சீண்டல் - சைல்டு ஹெல்ப் லைனால் சிக்கிய தந்தை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.