பள்ளி விபத்து எதிரொலி: புதுக்கோட்டையில் 100 பள்ளிக் கட்டடங்களை இடிக்க ஆட்சியர் அதிரடி

author img

By

Published : Dec 18, 2021, 10:15 AM IST

Updated : Dec 18, 2021, 10:27 AM IST

Pudukkottai collector orders to demolish 100 dangerous school buildings, Pudukkottai collector Kavitha Ramu,

ஆபத்தான நிலையில் உள்ளதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 கட்டடங்களை இடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்குப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை: பள்ளிகளில் உள்ள இடித்து அகற்றப்பட வேண்டிய கட்டடங்கள், பராமரிப்புக்குத் தேவைப்படும் கட்டடங்கள், புதிதாகத் தேவைப்படும் கட்டடங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுக்கப்பட்டன.

அதில், தகுதியற்ற நிலையில் உள்ள கட்டடங்கள் கடந்த இரண்டு மாதங்களாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் படிப்படியாக இடிக்கப்பட்டுவருகின்றன. மேலும், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் நேற்று (டிசம்பர் 17) கடிதம் எழுதியிருந்தார்.

325இல் 100 கட்டடங்கள் தரமற்றவை

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 325 பள்ளிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில், மிகவும் ஆபத்தான மற்றும் தகுதியற்ற நிலையில் உள்ளதாக 100 பள்ளிக் கட்டடங்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, இந்தக் கட்டடங்களை இடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று (டிசம்பர் 18) உத்தரவிட்டுள்ளார். மேலும், இதேபோன்று பல மாவட்ட ஆட்சியர்களும் மேற்கொண்டு உத்தரவு மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, மதுரை, திருவாரூர் மாவட்டங்களிலும் அதன் ஆட்சியர்கள், ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறையில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன் அடிப்படையிலேயே, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நேற்று மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் பள்ளிக் கட்டடங்களை ஆய்வுசெய்ய அலுவலர்கள் நியமனம்

Last Updated :Dec 18, 2021, 10:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.