குற்றங்களைக் குறைக்க "ஹலோ போலீஸ்" தொலைபேசி சேவை அறிமுகம்!

author img

By

Published : Nov 15, 2019, 3:56 PM IST

Updated : Jan 18, 2023, 1:17 PM IST

புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை: குற்றங்களைக் குறைக்க "ஹலோ போலீஸ்" என்ற தொலைபேசி சேவையை மாவட்ட கண்காணிப்பாளர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் "ஹலோ போலீஸ்" தொலைபேசி சேவை அறிமுகம்

குற்றங்களைக் குறைக்க "ஹலோ போலீஸ்" தொலைபேசி சேவையை, புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி, விபத்துகள், கஞ்சா விற்பவர்கள், மணல் கடத்துபவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் போன்ற அனைத்து புகார்களையும் தெரிவிக்க "ஹலோ போலீஸ்" என்ற தொலைபேசி சேவையை அறிமுகம் செய்திருக்கிறோம்

தகவல் தெரிவிக்கவேண்டிய தொலைபேசி எண் 7293911100 ஆகும். இதில், குற்றம் சம்பந்தமான அனைத்து ரகசிய தகவல்களையும் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்.அதனடிப்படையில், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தகவல் தெரிவிப்பவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே அவர்களது பெயர் வெளியிடப்படும் இல்லையென்றால் தகவல் தெரிவித்தவர் யார் என்று நாங்கள் வெளியிட மாட்டோம். இதனால், மக்கள் பயப்படாமல் இந்தச் சேவையை பயன்படுத்தலாம்.

மேலும், முகநூல் பக்கமான pudukkottaismc, இன்ஸ்டாகிராம் பக்கமான pdksmc, ட்விட்டர் பக்கமான Pdk_smc ஆகிய சமூக வலைதளங்களிலும் மக்கள் குறைகளை பதிவு செய்யலாம். இந்தச் சேவை 24 மணி நேரமும் செயல்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் போதைப் பொருளான கஞ்சா, போதை ஊசி போன்ற குற்றங்களுக்கு தனிப்பிரிவு அமைத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : குப்பைகளை அள்ள நவீன பேட்டரி வாகனங்கள் சாத்தூரில் அறிமுகம்!

Last Updated :Jan 18, 2023, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.