தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்

author img

By

Published : Aug 28, 2022, 10:21 PM IST

ஆளுநர் அனைத்து விஷயங்களும் பேசிக் கொண்டிருக்கிறார் அவர் ஆளுநரா, அண்ணாமலையா என்று தெரியவில்லை... பொன்.குமார்

ஆளுநர் அனைத்து விஷயங்களும் பேசிக் கொண்டிருக்கிறார் அவர் ஆளுநரா, அண்ணாமலையா என்று தெரியவில்லை என தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய மாநில தலைவர் பொன்.குமார் பேசியுள்ளார்.

பெரம்பலூர்: எளம்பலூர் சாலையில் உள்ள தனியார் திருமண கூட்ட அரங்கில் கட்டுமானம் மற்றும் மனைத் தொழிலாளர் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய மாநில தலைவர் பொன்.குமார் தலைமையில் இன்று (ஆக.28) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பொன்.குமார் கூறியதாவது, கட்டுமான பொருட்களின் விலையை நிரந்தரமாக கண்காணித்து நிர்மாணிக்க அரசு தலைமையில் உற்பத்தியாளர்கள், உபயோகிப்பாளர்கள் மற்றும் சங்க பிரதிநிதிகள் கொண்ட நிரந்தர விலை நிர்ணய குழு அமைக்க வேண்டும். பொறியாளர்களுக்கு கவுன்சில் அமைக்க வேண்டும், ரியல் எஸ்டேட்-ல் முக்கிய பங்காற்றும் நிலத்தரகர்களை அமைப்பு சாரா பட்டியலில் சேர்த்து வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில செயற்குழு கூட்டம்

மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில நேற்று கலந்து கொண்ட நிகழ்வில் கட்டுமான தொழில் தான் பிரதான தொழில் என்றும், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கட்டுமான தொழில் என்றும் கட்டுமான தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும் நமது கடமை என கூறியது வரவேற்கதக்கது. நரேந்திர மோடி அரசின் பிரதிநிதியாக உள்ள ஆளுநர் கட்டுமான பொருட்களின் விலை 28% GST உள்ளதாகவும், இத்தொழிலுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும், ஆகவே ஆளுநர் டெல்லிக்கு போகவேண்டும்.

கட்டுமான துறைக்கு 28% GST லிருந்து 5% விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை வைக்கிறோம். ஆளுநர் அனைத்து விஷயங்களும் பேசிக் கொண்டிருக்கிறார். இவர் ஆளுநரா இல்லை அண்ணாமலையா என்பதுதான் அவரது நடவடிக்கை போய்க்கொண்டிருக்கிறது என பொன்.குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச்சொந்தமான வீட்டை சொந்தம் கொண்டாடியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.