பெரம்பலூர் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

author img

By

Published : Sep 5, 2022, 10:50 PM IST

Etv Bharat

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் எனவும்; பெரம்பலூர் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்: திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று பெரம்பலூருக்கு வருகை (செப்.5) தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், 'பெரம்பலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை அரசு ஏன் இன்னும் தடை செய்யவில்லை என்பது குறித்து சந்தேகம் தோன்றுகிறது. இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை சேர்க்கக்கூடிய விக்ராந்த் போர்க்கப்பல் தந்த மத்திய அரசை நான் பாராட்டுகிறேன்.

டெல்டா மாவட்டப் பகுதிகளில் சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெறுகின்ற வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அலங்காரப் பணிகள் தேவையில்லை; மாறாக ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; அப்படி இல்லாத பட்சத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தரக்கூடிய அரசாகத்தான், இந்த அரசியல் செயல்பட்டு வருகின்றது.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவைகளை இந்த அரசு தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். கரோனாவிற்குப் பிறகு மற்ற நாடுகளைப் பார்க்கும் பொழுது, 140 கோடி மக்களைக்கொண்ட இந்தியா, படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகின்றது' எனத் தெரிவித்தார்.

பெரம்பலூரில் ஜி.கே.வாசன் பேட்டி

கட்சியின் மாவட்ட தலைவர் ஜனார்த்தனன், கொள்கை பரப்புச் செயலாளர் கரை சுப்பிரமணி உட்பட கட்சி நிர்வாகிகள் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தமிழில் இலவச ஆன்லைன் சீராக்கத் திட்டத்தை மேம்படுத்திய சென்னை ஐஐடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.