பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டைகளா?

author img

By

Published : Oct 23, 2020, 4:37 PM IST

Updated : Oct 23, 2020, 5:36 PM IST

dinoser egg founded in perambalur

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உருண்டை வடிவிலான பொருள்கள் டைனோசர் முட்டைகள் அல்ல என்று புவியியல் ஆய்வாளர் நிர்மல் ராஜா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் உள்ள வெங்கட்டான் ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிமரமாத்துப் பணிகளுக்காக ஏரியை தூர்வாரிய போது ஐம்பதிற்கும் மேற்பட்ட மிகப்பெரிய உருண்டை வடிவிலான பொருள்கள் கணடெடுக்கப்பட்டன. இவை டைனோசர் முட்டைகள் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து, அதனை ஏராளமான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில், இது குறித்து புவியியல் ஆய்வாளர் நிர்மல் ராஜாவிடம் பேசுகையில், "குன்னம் பகுதியில் கிடைத்த பொருள்கள் டைனோசர் முட்டைகள் இல்லை. டைனோசர் முட்டையின் ஓட்டுப் பகுதியில் ஆராய்ச்சி செய்து அதன் உருவ அமைப்பை ஆராய்ந்த பின்னரே அது டைனோசர் முட்டை என உறுதிப்படுத்த முடியும்.

dinoser egg founded in perambalur
குன்னத்தில் கண்டெடுக்கப்பட் உருண்டைகளை பார்வைியிடும் மக்கள்

கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டம், கள்ளங்குறிச்சி பகுதியில் அரசு சிமெண்ட் சுரங்கத்தில் ஒரு டைனோசர் முட்டை கண்டெடுக்கப்பட்டது. ஆனால், குன்னத்தில் கண்டறியப்பட்டது டைனோசர் முட்டைகள் அல்ல.

இங்கு கண்டெடுக்கப்ட்ட இரண்டு உருண்டைகளில் அம்மோநைட் என்னும் கடல் நத்தையின் படிமம் காணப்பட்டதால் அவை டைனோசர் முட்டைகள் எனக் கூறப்பட்டு வருகின்றன. புவியியல் ரீதியாக பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்த இடத்தில் தொல்லுயிர் எச்சங்கள் இதுபோன்று உருண்டை வடிவில் காணப்படும்" என்றார்.

குன்னத்தில் கண்டெடுக்கப்பட்ட உருண்டைகள் டைனோசர் முட்டைகளா?

கடல்வாழ் தொல்லுயிர் எச்சங்கள் அதிகம் கிடைக்கக்கூடிய குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளை புவியியல் துறையினர், தொல்பொருள் துறையினர் அகழாய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: புதைந்த நிலையில் 7 அடி நீளமுள்ள கல் மரம் கண்டுபிடிப்பு

Last Updated :Oct 23, 2020, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.