மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை!

author img

By

Published : Jul 22, 2021, 1:29 PM IST

'மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை'

தமிழ்நாடு முழுவதும் உள்ள மணல் குவாரிகளை அரசு மீண்டும் திறக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல்: மணலுக்காக காத்திருப்பு நிகழ்ச்சி இன்று (ஜூலை 22) நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்திளார்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மணலுக்காக காத்திருப்பு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம், அந்த வகையில் இன்று (ஜூலை 22) நாமக்கல்லில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

4 ஆண்டுகளாக முறையாக வழங்கவில்லை

கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு முறையாக மணல் வழங்கவில்லை. அரசு எம்.சாண்ட் பயன்படுத்த கூறியது. ஆனால் அதற்கான எந்த வழிமுறையையும் தெரிவிக்கவில்லை. எம்.சாண்ட் தரம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு கூட அமைக்கப்பட வில்லை.

மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை

தேர்தலுக்குப் பின் நீண்ட நாள்கள் ஆகியும் மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள், கட்டட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்

அரசுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை. மணல் குவாரியைத் தொடங்கினால் அரசுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

ஆறுகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் மணல் எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். புதிதாக அமைந்த அரசு எங்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு மணல் குவாரிகளை விரைவில் திறக்க வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் மனு அளிக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்கு மதுரை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு? - மாநகராட்சி சுற்றறிக்கையால் சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.