"காவிரி கரையோர மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு" - அமைச்சர் கே.என்.நேரு

author img

By

Published : Aug 6, 2022, 7:57 PM IST

அமைச்சர் கேஎன் நேரு

காவிரி கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள், மாற்று இடத்திற்கு வந்தால் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தர அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை, நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் இன்று (ஆக.6) பார்வையிட்டு மாவட்ட நிர்வாக மேற்கொள்ளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை, இன்று(6.8.22) பார்வையிட்டு, 300-க்கும் மேற்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.4,500 மற்றும் அரிசி, உடைகள் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

குமாரபாளையத்தில் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள்ளுக்கு அமைச்சர் நேரு நிவாரண உதவிகளை வழங்கிய பின் செய்தியாளரிடம் பேசுகையில், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்பு கொண்டு வழங்கப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டபடி, அனைத்து இடங்களிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருகின்றன.

காவிரி கரையோர மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டித்தர அரசு தயார் - அமைச்சர் கே.என்.நேரு

குடிசை மாற்று வாரிய வீடுகள்: காவிரி கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள், மாற்று இடத்திற்கு வந்தால் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தர அரசு தயாராக உள்ளது. இது குறித்து, தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்து, நிரந்தர தீர்வு காணப்படும். மேட்டூர் அணையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் 2 லட்சத்து 17 ஆயிரம் நீர் வெளியேற்றப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது தவறு: மழைப் பாதிப்பு இருந்தபோதிலும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? என எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, 'மழை பாதிப்பு தமிழகத்தில் எங்கும் இல்லை என்றும், பிற மாநிலங்களில் பெய்துள்ள மழைதான் இங்கு வந்துள்ளது. அதனால், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது தவறான தகவலாகும். அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

திருச்சி மாவட்டத்தில் காவிரி வெள்ளப்பெருக்கால், கல்லணை பாதுகாப்பிற்காக உத்தமசேரி பகுதியில் திறந்து விடப்பட்ட நீரால் 600 ஏக்கர் வாழை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வெள்ள நீர் வடிந்தவுடன் வாழைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. மேலும் பூளையார் பகுதியில், நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காப்பீடும் இல்லை! அங்கீகாரமும் இல்லை! அவல நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.