73 வயது முதியவருக்கு காது குத்திய மகள்கள்....நெகிழ்ச்சி சம்பவம்

author img

By

Published : Sep 19, 2022, 5:12 PM IST

முதியவருக்கு காது குத்திய மகள்கள்

சிறு வயதில் இருந்தே காது குத்தாததால் 73 வயதான தந்தைக்கு மொட்டை அடித்து, காது குத்திய மகள்களின் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்: பரமத்தி வேலூரைச் சேர்ந்த வரதராஜன்(73) இவருக்கு திருமணம் ஆகி நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் ஐந்து பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. பேரக்குழந்தைகள் எட்டு பேர் உள்ளனர். இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.

தற்போது மகனுடன் வசித்து வரும் வரதராஜன் தனது மகள்களிடம் சிறு வயதில் தனக்கு காது குத்தும் விழா நடக்கும்போது விழாவில், புது துணிமணிகள் கம்மல் திருட்டுப் போய்விட்டது. அதற்குப் பிறகு தனது தாய் இறந்ததால் காது குத்தும் நிகழ்ச்சி தனது வாழ்நாளில் நடக்கவே இல்லை என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

உடனே தனது மகள்கள் தனது அப்பாவின் நீண்ட நாள் ஆசையை போக்கும் வகையில் அனைவரும் ஒன்று கூடி அப்பாவிற்கு காதணி விழா நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து, நைனாமலை வரதராஜ பெருமாள் சன்னதியில் மொட்டை அடித்து காதுகுத்து விழா சிறப்பாக நடந்தது. இவ்விழாவில் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இது குறித்து வரதராஜன் கூறுகையில், ”எனது நீண்ட நாள் கனவான காது குத்து விழாவை எனது மகள்கள் நிறைவேற்றி வைத்துள்ளனர். இது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும், புது அனுபவமாகவும் இருந்தது. சிறு குழந்தை போல் நான் மாறிவிட்டது போன்று தோன்றுகிறது. இதேபோல் தீராத ஆசைகள் உள்ள மற்ற வயதான பெற்றோர்களின் வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும்” எனக் கூறினார்.

இது குறித்து அவரது மகள்கள் கூறுகையில், ”எங்கள் அனைவருக்கும் சீரும் சிறப்புமாக காதுகுத்து, திருமணம் போன்ற விசேஷங்களை எங்களது அப்பா செய்து கொடுத்துள்ளார். இவருக்கு காது குத்தவில்லையே என்பதே எங்களுக்கு தெரியாது. அவர் பேரக் குழந்தைகளிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது இது பற்றி கூறியுள்ளார். அதை தெரிந்த நாங்கள் ஒன்றாக கூடி அவரது ஆசியை நிறைவேற்றி வைத்தோம் எனத் தெரிவித்தனர்.

முதியவருக்கு காது குத்திய மகள்கள்

73 வயது முதியோர்க்கு காது குத்தும் விழா நடந்ததில் பரமத்தி வேலூர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: உடல் மனநலப்பாதிப்புகளில் மகன்கள் - ஆயிரம் ரூபாயில் குடும்பத்தை நடத்தும் தாயின் கண்ணீர் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.