நீர் சூழ்ந்து காணப்படும் கொள்ளிடம்...! படகு மூலம் மக்கள் மீட்பு...

author img

By

Published : Aug 6, 2022, 12:45 PM IST

kollidam flood  people stuck in kollidam flood  kollidam river overflow  kollidam river  நீர் சூழ்ந்து காணப்படும் கொள்ளிடம்  கொள்ளிடம் வெள்ளம்  படகு மூலம் மக்கள் மீட்பு  நிறம்பிய கொள்ளிடம்

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிராமங்களுக்குள் நீர் புகுந்தது. அங்குள்ள மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர்.

மயிலாடுதுறை: கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக உபரி நீரானது தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அதிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் கொள்ளிடம் ஆற்றை சென்றடைந்துள்ளது.

இந்த நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலக்கிறது. கடந்த மூன்று தினங்களாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், நாளுக்கு நாள் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது கீழணைலிருந்து 2 லட்சத்து 8,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர் சூழ்ந்து காணப்படும் கொள்ளிடம்

இதன் காரணமாக கொள்ளிடம் வழியே செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் நீர் நிரம்பி, அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்களை படகு மூலமாக மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள மக்களையும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள வடிகால்களில் உள்ள கதவணைகள் பழுதடைந்ததால் நீரின் அழுத்தம் தாங்காமல் கரையின் மறுபக்கம் உள்ள கிராமங்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக ஆயிரம் ஏக்கருக்கு மேல், பருத்தி, சோளம், மரவள்ளி கிழங்கு, மலர் மற்றும் காய்கறி சாகுபடி, விளைநிலங்களும் சுற்றுவட்டார கிராமப்பகுதி சாலைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இதையும் படிங்க: திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.