விநாயகர் சதுர்த்தி நாளில் மயூரநாதர் கோயிலில் யானை அபயாம்பிகைக்கு சிறப்பு வழிபாடு

author img

By

Published : Aug 31, 2022, 5:59 PM IST

Updated : Aug 31, 2022, 10:45 PM IST

விநாயகர் சதுர்த்தி நாளில் மயூரநாதர் கோவிலில் யானை அபயாம்பிகைக்கு சிறப்பு வழிபாடு

மயூரநாதர் கோயிலில் யானை அபயாம்பிகைக்கு சிவ வாத்தியம் முழங்க பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை: விநாயகர் சதுர்த்தி விழா இன்று(ஆக.31) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு தலங்களிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் வீடுகளில் சிறிய வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து, பொதுமக்கள் பூஜை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் சிறப்புப் பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது. மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை சிவ வாத்தியங்களுடன் கோயிலுக்கு அழைத்து வந்தனர். யானைக்கு வெள்ளிக்கொலுசு அணிவித்து மாலை அணிவிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி நாளில் மயூரநாதர் கோயிலில் யானை அபயாம்பிகைக்கு சிறப்பு வழிபாடு

அப்பகுதி மக்கள் யானைக்கு பழங்கள், சர்க்கரை வழங்கியும் தீபாராதனை செய்தும் வழிபாடு நடத்தினர். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது, யானை புனித நீரை துதிக்கையால் முகர்ந்து தீர்த்தமாக தெளித்தது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் யானைக்கு மலர்த்தூவி வழிபாடு நடத்தினர். பின்னர் வீடுகள் தோறும் யானையை வரவேற்று ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.

இதையும் படிங்க:முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் கொழுக்கட்டை படையல்... அசரவைக்கும் காரணம்?!

Last Updated :Aug 31, 2022, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.