கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்.. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்திய அமைச்சர்

author img

By

Published : Aug 31, 2022, 8:21 PM IST

அறிவுறுத்திய அமைச்சர்

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியிலுள்ள கிராமங்களில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள் என அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் அறிவுறுத்தினார்.

மயிலாடுதுறை: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கனமழையால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் எளிதாக முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து, சீர்காழி அருகே கரையோரப்பகுதிகளான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல் கோரத்திட்டு ஆகியப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அங்கு வெள்ளத்தால் தவிக்கும் அப்பகுதியினரை வருவாய்த்துறையினர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ள நிலையில் இன்று (ஆக.31) அவர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் குறைகளைக் கேட்டறிந்தார். அத்துடன் மக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, உள்ளிட்ட உதவிகளை செய்ய மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் அறிவுறுத்தினார்.

பின்னர் முதலைமேடு திட்டு, நாதன்படுகை, அளக்குடி கிராமத்திற்கு நேரில் சென்று உபரி நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால், மீதமுள்ள மக்கள் பாதுகாப்பாக மேடான பகுதிகளுக்கு வருமாறும்; கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஆய்வு

அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன், எம்.பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தங்களை அழைக்காமல் ஜவுளி வளாகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்.. வேதனையில் வியாபாரிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.