மத்திய குழு ஆய்வு: நாகையை மீட்டெடுக்க ரூ.200 கோடி... ஆட்சியர் அளித்த அறிக்கை

author img

By

Published : Nov 24, 2021, 8:08 AM IST

Updated : Nov 24, 2021, 4:49 PM IST

நாகையில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு

நாகை ஆட்சியர் மழை சேத பாதிப்புகளிலிருந்து மாவட்டத்தை மீட்டெடுக்க 200 கோடி ரூபாய்க்கு மேல் நிவாரண உதவி தேவைப்படுவதாக அறிக்கை ஒன்றை மத்திய குழுவிடம் தாக்கல்செய்துள்ளார்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நேற்று (நவம்பர் 23) மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வுசெய்தனர்.

நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் பகுதியில் மழை நீரால் மூழ்கி நாசமான சம்பா நெற்பயிர்களை ஆய்வுசெய்த மத்திய அரசின் உள் துறை இணைச் செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் விவசாயிகளிடம் பாதிப்புகளைக் கேட்டறிந்தனர். அப்போது மழை வெள்ள பாதிப்புகள் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மத்திய குழுவினரிடம் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்டத்தின் கால்நடைகள் பாதிப்பு, மனித உயிரிழப்புகள் விவரம், வீடுகள் சேதம், விவசாய பாதிப்பு உள்ளிட்டவை அடங்கிய காணொலி தொகுப்பு மத்திய குழுவினருக்குத் திரையிடப்பட்டது.

இதில் பி.ஆர். பாண்டியன், காவிரி தனபாலன் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள் மழை வெள்ள பாதிப்புகள் குறித்த கோரிக்கை மனுக்களை மத்திய குழுவினரிடம் அளித்தனர்.

அதன்பின் நாகப்பட்டினம் முழுவதும் மழை சேதங்களை மீட்டெடுக்க 200 கோடி ரூபாய்க்கு மேல் நிவாரண உதவி தேவை என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மத்திய குழுவினருக்கு அறிக்கைத் தாக்கல்செய்தார்.

மத்திய குழு ஆய்வு

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், கீழ்வேளூர் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி, அரசுத் துறை அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:Theni Flood: ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் - உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள்

Last Updated :Nov 24, 2021, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.