மாணவர்களின் தற்கொலைக்கு ஆளுநர் பதில் தருவாரா? - அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Sep 8, 2022, 5:25 PM IST

Etv Bharat

தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தற்கொலைகளுக்கு மத்திய அரசும் தமிழ்நாடு ஆளுநரும் தான் பதில் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

மயிலாடுதுறை: குத்தாலம் உத்தவேதீஸ்வரர் ஆலயத்தில் இன்று (செப்.8) நடந்த பாமக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நீட் தேர்வுகளினால் தமிழ்நாட்டில் ஏற்படும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு தமிழ்நாடு என்ன பதில் தருவார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம்: தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எழுதப்படாத மோசடியாக ஒரு மூட்டைக்கு ரூ.50 வரை விவசாயிகளிடம் வசூல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஆயிரம் கோடி வரை கரும்பு நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு உள்ளதாகவும், அதனை அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் முதலமைச்சர், நீர் மேலாண்மைக்கே அதிக முக்கியத்துவம் வருங்காலத்தில் கொடுக்க வேண்டும்; அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றார்.

நீட் தற்கொலைகள்-ஆளுநர் பதில் தருவாரா? இன்று காலை சென்னை மதுரவாயில் பகுதியில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். பெற்றோர்களுடைய அழுத்தம் தாளாமல் மாணவர்கள் இது போன்ற முடிவுகள் எடுப்பதாகவும், மாணவர்கள் தற்கொலை முடிவுகளை தயவு செய்து எடுக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற தற்கொலைகள் நடப்பதில்லை என்றும் இதற்கு ஆளுநர் என்ன பதில் சொல்லப் போகிறார் எனவும் கேள்வி எழுப்பினார். தற்கொலைகளுக்கு காரணம் நீட் தேர்வு தான் என்றும் அதை ரத்து செய்யாத மத்திய அரசுதான் தமிழ்நாடு மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக தாம் நினைப்பதாகக் கூறினார்.

மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

அவசர சட்டம் வேண்டும்: அதிகமான கொலை குற்றங்கள் டெல்டா பகுதிகளில் நடைபெறுகிறது. முதலமைச்சரின் கீழ் உள்ள காவல்துறை இயங்குவதால் இதற்கு சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என்றார். டெல்டா பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளை அழைத்து கலந்து ஆலோசித்து இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றார். ஆன்லைன் விளையாட்டுகளை அரசு அவசர சட்டம் கொண்டுவந்து தடைசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: சாதி, மத ரீதியிலான பதற்றங்கள் தேவையற்றது - அன்புமணி ராமதாஸ் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.