ETV Bharat / state

தடைசெய்யப்பட வலையில் மீன் பிடிப்பு - 200 கிலோ மீன்கள் பறிமுதல்

author img

By

Published : Jul 25, 2021, 7:49 AM IST

வனகிரி மீனவ கிராமத்தில் தடை செய்யப்பட்ட வலையில் பிடிக்கப்பட்ட 200 கிலோ மத்தி மீன்களை, மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தடைசெய்யப்பட்ட வலை 200 கிலோ மத்தி மீன்கள் பறிமுதல்  மீன் வளத்துறை  சீர்காழியில் தடைசெய்யப்பட்ட வலை 200 கிலோ மத்தி மீன்கள் பறிமுதல்  200 kg of fish seized because of using prohibited net  fish seized  fish seized because of using prohibited net  sirkazhi fish seized  mayiladuthurai news  mayiladuthurai latest news  mayiladuthurai sirkazhi fish seized because of using prohibited net  மயிலாடுதுறை செய்திகள்  தடை செய்யப்பட்ட வலை  மீனவர்கள் போராட்டம்  மீன்வளத்துறை அமலாக்க பிரிவு காவல் துறை  மயிலாடுதுறை சீர்காழியில் தடைசெய்யப்பட்ட வலை 200 கிலோ மத்தி மீன்கள் பறிமுதல்  தடை செய்யப்பட்ட வலைகளில் பிடிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல்  மீன்கள் பறிமுதல்
மீன்கள் பறிமுதல்

மயிலாடுதுறை: சீர்காழி தாலுகாவில் திருமுல்லைவாசல், மடவாமேடு, பூம்புகார் உள்ளிட்ட மூன்று இடங்களில் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

இதனை அனுமதிக்கவில்லை என்றால், 1983ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள 21 சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்னிறுத்தினர்.

இதையடுத்து மீன் வளத்துறை மற்றும் மீன்வளத்துறை அமலாக்க பிரிவு காவல் துறையினர், வருவாய்த் துறையினர் கடலோர மீனவ கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சீர்காழி அருகே வானகிரி கிராமத்தில் தடை செய்யப்பட 40 மி.மீ குறைவான அளவுடைய இழுவலையை பயன்படுத்தி பிடிக்கப்ட்ட 200 கிலோ மத்தி மீன்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த நான்கு தினங்களாக மீன் வளத்துறை மற்றும் மீன்வள துறை அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் நடத்தப்பட்ட ஆய்வில், இதுவரையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறியதாக 255 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 24) வானகிரியில் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு, மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பறிமுதல் செய்த மீன்களை மீன்வளத்துறை அலுவலர்களே அரசின் சார்பாக அவ்விடத்திலேயே ஏலம் விட்டனர்.

இதையும் படிங்க: பணி நீக்கம்: தனியார் பைனான்ஸ் நிறுவன உரிமையாளரை தாக்கிய ஊழியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.