’தமிழ் விக்கிப்பீடியாவில் மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும்’

author img

By

Published : Sep 30, 2019, 11:46 PM IST

மதுரை: தமிழ் விக்கிப்பீடியா தகவல் மூலத்தில் கல்லூரி மாணவ மாணவியரின் பங்களிப்பு அதிகமாக வேண்டும் என்று விக்கிப்பீடியா வல்லுநர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான மகாலிங்கம், "தமிழ் தகவல் அடங்கிய விக்கிப்பீடியா ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் மக்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தற்போது பல மட்டங்களில் பரவலாக்கி வருகிறோம்.

இதன் அடிப்படையில் ஒருநாள் பயிலரங்கம் இன்று நடைபெற்றுவருகிறது. அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை சார்ந்த கட்டுரைகள் குறித்தும், மொழிபெயர்க்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறது" என்றார்.

விக்கிப்பீடியா பயற்சிப் பட்டறை

’அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு செல்ல திட்டம்’

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த 'களம்' அமைப்பின் நிறுவனர் வரதராஜன் கூறுகையில், "தமிழ் மொழியின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும், இந்த பயிற்சியானது தென் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாகும். அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு செல்லும் வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இப்பயிலரங்கு மாதந்தோறும் நடைபெறவுள்ளது. அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன" என்றார்.

மாணவர்களின் கருத்து

’கூகுள் மொழிபெயர்ப்பை சரிசெய்ய பயிற்சி’

கூகுளின் அவசியம் குறித்தும், அதில் தவறுகள் செய்வதன் அவசியம் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துகொண்ட கணினி பொறியில் துறைத்தலைவர் அரண், "இந்தக் காலத்தில் மாணவர்கள் நூல்களிலிருந்து தரவுகளை தேடுவது குறைந்துவிட்டது. கூகுளில்தான் தேடுகின்றனர்.

அப்படியானால், அவர்கள் கூகுளில் தோன்றும் தகவல்கள் உண்மைத்தன்மையாகவும், பிழையின்றியும் இருக்க வேண்டியது மிக அவசியம். இந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தப் பயிலரங்கம் நடைபெற்றுவருகிறது. கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருளில் நிகழக்கூடிய பிழைகளையும், சரிசெய்வதற்கான பயிற்சியையும் மாணவர்களுக்கு வழங்குகிறோம்" என்றார்.

மகாலிங்கம் பேட்டி

’விக்கிப்பீடியா அனைத்து மக்களையும் சென்றடையவேண்டும்'

பயிலரங்கில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் எங்களிடம் பேசுகையில்,"தமிழ் விக்கிப்பீடியாவில் கிடைக்கக்கூடிய தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும்; அதேநேரம் அது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழியின் வளர்ச்சி இன்னும் விரிவாகும். ஆகையால் இதுபோன்ற பயிலரங்குகள் எங்களுக்கு மட்டுமன்றி மொழி வளர்ச்சிக்கும் உந்துசக்தியாக அமையும்" என அவர் தெரிவித்தார்.

Intro:விக்கிப்பீடியாவில் மாணவர்கள் பங்கேற்பு அதிகமாக வேண்டும் - வல்லுநர்கள் வேண்டுகோள்

தமிழ் விக்கிபீடியா தகவல் மூலத்தில் கல்லூரி மாணவ மாணவியரின் பங்களிப்பு அதிகமாக வேண்டும் என்று விக்கிப்பீடியா வல்லுனர்கள் பேட்டிBody:விக்கிப்பீடியாவில் மாணவர்கள் பங்கேற்பு அதிகமாக வேண்டும் - வல்லுநர்கள் வேண்டுகோள்

தமிழ் விக்கிபீடியா தகவல் மூலத்தில் கல்லூரி மாணவ மாணவியரின் பங்களிப்பு அதிகமாக வேண்டும் என்று விக்கிப்பீடியா வல்லுனர்கள் பேட்டி

மதுரையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து ஒருநாள் பயிலரங்கு அதன் மாணவ மாணவியருக்கு இன்று நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

தமிழ் விக்கிபீடியா ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியருமான மகாலிங்கம் கூறுகையில்,தமிழ் விக்கிப்பீடியா என்பது ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும் தமிழ் மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது பல மட்டங்களில் பரவலாக்கி வருகிறோம் அந்த அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக கணினி பொறியியல் துறை மாணவர்களுக்கு களம் என்ற அமைப்புடன் இணைந்து ஒருநாள் பயிலரங்கினை இன்று நடத்தி வருகிறோம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளையும் மொழிபெயர்க்கும்போது ஏற்படக்கூடிய சிக்கல்களை உணர்ந்து அவற்றை சரி செய்வதற்கான திறமையை மாணவர்களுக்கு இந்தப் பயிலரங்கு வழங்கும் கட்டுரைகளை திருத்துவது மட்டுமன்றி அதனை எவ்வாறு படைப்பாக்கம் செய்வது என்பதையும் இந்த ஒரு நாள் பயிலரங்கு மூலம் அவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்றார்

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த களம் அமைப்பின் நிறுவனர் வரதராஜன் கூறுகையில்,தமிழ் மொழியின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் இந்த பயிற்சியானது தென் தமிழகத்திலேயே முதல் முறையாகும். அனைத்து மாணவ மாணவியருக்கும் கொண்டு செல்லும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இப் பயிலரங்கு மாதந்தோறும் நடைபெறும் மேலும் அனைத்து கல்லூரி மாணவ மாணவியருக்கும் இப்பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன இதன் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்றார்

கணினி பொறியியல் துறையின் தலைவர் அருண் கூறுகையில், தற்போதுள்ள அனைத்து மாணவர்களும் தங்களுக்கான தரவுகளை நூல்களிலிருந்து தேடுவது என்பது குறைவு. கூகுள் தேடுபொறியில் தான் தங்களின் தேடலை செய்து வருகிறார்கள். ஆகையால் அவர்கள் கூறிய தகவல் உண்மை தன்மையாகவும் பிழை இன்றியும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் பயிலரங்கு நடைபெற்று வருகிறது கூகுள் மொழிபெயர்ப்பு மென்பொருளில் நிகழக்கூடிய பிழைகளையும் சரி செய்வதற்கான பயிற்சிகளையும் இந்த பயிலரங்கம் மூலம் மாணவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்றார்

பயிலரங்கில் பங்கேற்ற மாணவ மாணவியர் கூறுகையில், தமிழ் விக்கிப்பீடியாவில் கிடைக்கக்கூடிய தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் அதேநேரம் அது அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் அப்போதுதான் தமிழ் மொழியின் வளர்ச்சி இன்னும் பிரிவாகும் ஆகையால் இது போன்ற பயிலரங்குகள் எங்களுக்கு மட்டுமன்றி மொழி வளர்ச்சிக்கும் உந்துசக்தியாக அமையும் என்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.