கல்விக்கடன் திருவிழா: 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கடன் - சு.வெங்கடேசன் எம்பி தகவல்

author img

By

Published : Nov 13, 2022, 11:05 PM IST

Etv Bharat

மதுரையில் நடந்த கல்விக்கடன் திருவிழாவில் 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டதாக சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட நிர்வாகமும் வங்கிகள் நிர்வாகமும் இணைந்து அமெரிக்கன் கல்லூரியில், உயர்கல்வி பயிலும் மதுரை மாவட்ட மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் இன்று (நவ.13) நடைபெற்றது.

இம்முகாமில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் உயர்கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகை தந்திருந்தனர். இவர்களில் தகுதியான 1002 நபர்களுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான உரிய தகுதிகள் அடிப்படையில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இணையதளம் வழியாக 900 மாணவர்கள் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளனர். இம்முகாமில் கல்விக்கடன் பெற விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கீழ்க்கண்ட வங்கிகள் வாரியாக..

1. கனரா வங்கி - 102 மாணவர்கள் - 7.28 கோடி ரூபாய்

2. பாரத ஸ்டேட் வங்கி - 86 மாணவர்கள் - 2.61 கோடி ரூபாய்

3. இந்தியன் வங்கி - 30 மாணவர்கள் - 1.51 கோடி ரூபாய்

4. இந்திய ஓவர்சீஸ் வங்கி - 24 மாணவர்கள் - 1.31 கோடி ரூபாய்

5. யூனியன் வங்கி - 21 மாணவர்கள் - 1.08 கோடி ரூபாய்

6. சென்ட்ரல் வங்கி - 3 மாணவர்கள் - 1.47 கோடி ரூபாய்

7. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி - 7 மாணவர்கள் - 1.80 கோடி

8. பாங்க் ஆப் பரோடா - 18 மாணவர்கள் - 1.03 கோடி ரூபாய்

மதுரை கல்விக்கடன் திருவிழா: 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கடன்
மதுரை கல்விக்கடன் திருவிழா: 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கடன்

மொத்தமாக 291 மாணவர்களுக்கு 18.51 கோடி ரூபாய் இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் உதவி பெற்றுள்ள மாணவர்கள் கல்வியின் மூலம் தங்களது வாழ்வை மேம்படுத்தி வளம்பெற இம்முகாம் நடைபெற்றது.

மதுரை கல்விக்கடன் திருவிழா: 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கடன்
மதுரை கல்விக்கடன் திருவிழா: 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கடன்

இம்மாபெரும் கல்விக்கடன் முகாமில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கெடுத்து நிகழ்வினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமை வகித்தார்.

கல்விக்கடன் திருவிழா: 291 மாணவர்களுக்கு ரூ.18.51 கோடி கடன் - சு.வெங்கடேசன் எம்பி தகவல்

கூடுதல் ஆட்சியர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிம்ரஞ்ஜித் சிங் கஹ்லோன் மற்றும் மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் டி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் மற்றும் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் ஆகியோருடன் பங்கெடுத்தனர் என வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'எதிர்க்கட்சி தலைவரே அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்திருக்கக்கூடாது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.