மாஸ்க் பரோட்டா 'கரோனா' தோசை - மதுரையை அசத்தும் 'டெம்பிள் சிட்டி'

author img

By

Published : Jul 8, 2020, 9:42 AM IST

madurai

மதுரை: மக்களுக்கு முகக்கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரபல தனியார் உணவகம் ஒன்று மாஸ்க் பரோட்டாவை அறிமுகம் செய்துள்ளது.

உலகமே கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வகையில் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஆனால், நமது நாட்டில் மீம்ஸ் போட்டு விளாயாடிக் கொண்டிருக்கிறார்கள். இது என்ன பிரமாதம் கரோனா ஜிமிக்கி கம்மல், கரோனா வடிவிலான சேலை, கரோனா தோசை, மாஸ்க் பரோட்டா என ட்ரெண்டுக்கு ஏற்றார்போல் வியாபாரிகள் கல்லா கட்டி வருகின்றனர்.

கரோனா தோசை
கரோனா தோசை

திருப்பூரைச் சேர்ந்த பேஷன் டிசைன் படிப்பை முடித்த மாணவி, கரோனா போன்று கருப்பு, வெள்ளை வண்ணத்தில் செய்து கரோனாவையே வெட்கப்பட வைத்தார். புதுக்கோட்டையில் நகை பட்டறை வைத்திருக்கும் வீரமணி என்பவர் கரோனா சைஸ் வடிவில் ஜிமிக்கி கம்மல் செய்து பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கோ கோ கரோனா என்று கூறியே கரோனாவை விரட்டும் கும்பல் கூட மாஸ்க் இல்லாமல் வெளியே செல்ல முடியாது.

மாஸ்க் பரோட்டா
மாஸ்க் பரோட்டா

அந்த வகையில் மாஸ்க் வடிவத்தில் பரோட்டாவும், கரோனாவைப் போன்று தோசை மற்றும் போண்டா செய்து அசத்துகிறது மதுரையிலுள்ள ஒரு ஹோட்டல். இதையெல்லாம் கண்டால் கரோனா பயந்து ஓடியிருக்க வேண்டாமா என்று கேட்கத் தோன்றுகிறது. பரோட்டா உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை தாண்டி அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது.

மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல்

மதுரையில் உள்ள அனைத்து கடைகளிலும் பரோட்டா தனிக்கவனம் பெற்றுள்ளது. விதவிதமாக தயாரிக்கப்படும் பரோட்டாவை மதுரை மக்கள் ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள். இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரபல தனியார் ஹோட்டல் நிர்வாகத்தினர், கரோனா காலத்தை நினைவூட்டும் வகையில் 'மாஸ்க்' வடிவத்தில் பரோட்டாவும், 'கரோனா' நுண் கிருமி வடிவத்தில் ரவா தோசையும் வெங்காய போண்டாவும் செய்து அசத்தி வருகின்றனர்.

வித்தியாசமான இந்த முயற்சிக்கு வாடிக்கையாளர்கள் நல்ல ஆதரவு தருகின்றனர். தங்களது, வாடிக்கையாளர்களின் நலன் காக்கும் பொருட்டு மூலிகை ரசமும், கபசுரக் குடிநீரும் இலவசமாக வழங்கி வருகிறோம் என ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்தார். மேலும், எப்போதும் வித்தியாசமாக யோசிக்கும் மதுரை மக்களிடம் இந்த மாஸ்க் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தனி முத்திரை பதிக்கும் என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கூட்டம் கூடினால் அலாரம் அடிக்கும் - தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க ஐரிஸ் கருவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.