மதுரை பெண்களிடம் ட்ரெண்டாகும் கரோனா கம்மல்

author img

By

Published : Sep 24, 2021, 10:40 PM IST

கரோனா கம்மல்

மதுரையில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்டு வரும் கரோனா கம்மல் மதுரை பெண்களிடம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

மதுரை: நேதாஜி சாலையில் அமைந்துள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் கரோனா வைரஸ் போன்று வடிவமைக்கப்பட்ட கம்மல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த வடிவமைப்பு பொதுமக்களிடமும் பெண்களிடமும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கம்மல் குறிப்பாக பெண்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

கரோனா கம்மல்

கரோனா பெருந்தொற்று பரவல் குறித்த அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், கரோனா வைரஸ் வடிவிலான எந்த பொருட்களும் பொதுமக்களை ஈர்க்கவே செய்கிறது. அந்த வகையில் கரோனாவையே கம்மல் ஆக்கிக் கொண்ட மதுரை மக்கள், தங்களது ரசனையின் மூலம் தமிழ்நாடு மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்கள்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் புதிதாக 1,733 பேருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.