Southern Railway:இரட்டை ரயில் பாதைப் பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம்

Southern Railway:இரட்டை ரயில் பாதைப் பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம்
Southern Railway:நாகர்கோவில் இரட்டை ரயில் பாதைக்கான இணைப்புப் பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Southern Railway:மதுரை: இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் மற்றும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் கிராசிங் நிலையம் ஆக மேம்படுத்தும் பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் ஜனவரி 26, 27, பிப்ரவரி 4 முதல் 9 வரை, பிப்ரவரி 14 முதல் 17 வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
மேலும் ஜனவரி 27ஆம் தேதி அன்று மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் விரைவு ரயில் (16729) மற்றும் ஜனவரி 28ஆம் தேதி அன்று புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (16730) ஆகியவை திருநெல்வேலி - புனலூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஈரோடு அருகில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் - வானம் தெளிந்தவுடன் மீண்டும் பறந்தது
