'வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் குறையல' - முதலமைச்சரை பாராட்டிய பெண்

author img

By

Published : Aug 6, 2021, 7:13 PM IST

மு.க.ஸ்டாலினை பாராட்டிய பெண்

'வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் குறையவில்லை' என அலைபேசியில் கிருஷ்ணகிரி பெண் ஒருவர் முதலமைச்சரை பாராட்டிய காணொலி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கிருஷ்ணகிரி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஆக. 5) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பிறகு கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூரில் உள்ள தனியார் விமான நிலையத்திற்கு முதலமைச்சர் சென்றார். அவ்வழியில் பெண் ஒருவர் அவரின் காரை மறித்து, 'மாஸ்க்கை எடுங்க சார்; எப்போ சார் உங்க பார்க்குறது' என உரிமையுடன் பேசினார்.

விஸ்வரூப வெற்றி என்றால் ஸ்டாலின்

இதனையடுத்து முதலமைச்சர் தனது முகக்கவசத்தை கழற்றினார். மகிழ்ச்சியில் அப்பெண் 'விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி, அதன் பெயர் தான் ஸ்டாலின்' என்று கூறி, ஒரு சிறிய சீட்டை முதலமைச்சரிடம் வழங்கினார்.

ரம்யாவிடம் முதலமைச்சர் பேச்சு

அந்த துண்டு சீட்டில் அப்பெண்ணின் அலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அப்பெண்ணிடம் முதலமைச்சர் பேசினார்.

மு.க.ஸ்டாலினை பாராட்டிய பெண்

'வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் குறையல'

அப்போது அந்தப் பெண் முதலமைச்சரிடம், "தரமான சாலை, குடிநீர் வசதி அமைத்து தந்தால் தமிழ்நாடு நன்றாக இருக்கும். உங்களிடம் இதுபோன்று பேசுவேன் என்று நினைக்கவில்லை;

அருமையான ஆட்சி. கருணாநிதி 11 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்த சாதனையை நீங்கள் முறியடிக்க வேண்டும். சார் சூப்பராக இருக்கீங்க... எவ்வளவு வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் கொஞ்சம் கூட குறையவில்லை" என வெகுவாகப் பாராட்டினார்.

இவ்வாறு சாமானியப் பெண் முதலமைச்சரிடம் அலைபேசியில் பேசும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து இவரது பெயர் ரம்யா. இவர் ஓசூர் மாநகராட்சி பழைய கோயில் பகுதியில் வசித்து வருகிறார் என்றும், அவரது கணவர் பெயர் பத்மநாபன் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 'கரோனா காலத்தில் 790 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்' - மகாராஷ்டிரா அரசு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.