திருவள்ளுவர் தினம்... கேக்கில் கற்பனை கூகுள் டூடுல் - ஐடி ஊழியர் அசத்தல்

author img

By

Published : Jan 16, 2023, 7:20 PM IST

திருவள்ளுவர் தினம்... கேக்கில் கற்பனை கூகுள் டூடுல்- ஐடி ஊழியர் அசத்தல்

திருவள்ளுவர் தினத்தில் கூகுள் நிறுவனம் கூகுள் டூடுலில் திருவள்ளுவர் உருவத்தை வைத்து அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று சுகர் ஆர்ட்டில் கற்பனை ஓவியம் வரைந்து கூகுள் நிறுவனத்திற்கு ஓசூர் ஐடி ஊழியர் அனுப்பியுள்ளார்.

திருவள்ளுவர் தினம்... கேக்கில் கற்பனை கூகுள் டூடுல்- ஐடி ஊழியர் அசத்தல்

கிருஷ்ணகிரி: ஓசூர் சின்னஎலசகிரி பகுதியில் வசித்து வருபவர், லூகாஷ் (38). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அதிக அளவு பற்றுகொண்ட இவர் தனது மனைவியுடன் இணைந்து 1330 திருக்குறள்களையும் ஐஸ் குச்சிகளில் எழுதி சாதனைப் படைத்துள்ளார்.

நாளை திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், கூகுள் நிறுவனம் உலகின் பல்வேறு அறிஞர் பெருமக்களைப் போற்றும் வகையில் கூகுள் டூடுலில், அவர்களது உருவத்தை வைத்து பெருமைப்படுத்தியது போல உலக பொதுமறையை எழுதிய திருவள்ளுவரையும் திருக்குறளையும் கூகுள் டூடுலில் பதிவேற்றம் செய்து திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என லூகாஸ் கூகுள் முன்மொழிவு குழுவுக்கு இமெயில் வழியாக கோரிக்கை வைத்துள்ளார்.

ஏற்கெனவே கூகுள் நிறுவனம் உலக அறிஞர்கள் சீனாவைச் சேர்ந்த கன்பூசியஸ், ஆங்கில அறிஞரான வில்லியம் ஷேக்ஸ்பியர், ரஷ்ய அறிஞரான லியோ டால்ஸ்டாய் ஆகியோருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கூகுள் டூடுலில் அவர்களது உருவத்தை பதிவேற்றம் செய்துள்ளது. அதனைப்போல திருவள்ளுவருக்கும் கூகுள் நிறுவனம் பெருமை சேர்க்க வேண்டும் எனவும்; திருவள்ளுவரும் உலகத்தில் வாழ்ந்த மற்ற அறிஞர்களுக்கு நிகரானவர் என்றும்; எந்த விதத்திலும் அவர் சளைத்தவர் அல்ல எனவும் கூறியுள்ளார்.

திருக்குறளையும் திருவள்ளுவரையும் கூகுள் நிறுவனம் கூகுள் டூடுலில் பதிவேற்றம் செய்யும் வகையில் கற்பனையாக லூகாஸ் சுகர் ஆர்ட்டில் கற்பனை கூகுள் டூடுல் ஒன்றை தயாரித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக, இந்த பணிகளில் ஈடுபட்ட அவர் தற்போது அந்த கற்பனை ஓவியத்தை கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளார்.

இதையும் படிங்க:தமிழறிஞர்களுக்கு விருதுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.