கடன் பிரச்சினைக்கு தீர்வு இதுவல்ல - நால்வர் தற்கொலை உணர்த்தும் பாடம்

author img

By

Published : Aug 6, 2021, 10:52 PM IST

தற்கொலை தீர்வல்ல

ஒசூர் அருகே கடன் பிரச்சினை காரணமாக கடிதம் எழுதி வைத்து படுக்கையறையிலேயே 4 பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை எண்ணங்களை போக்க தக்க விழிப்புணர்வு அரசு தரப்பில் ஏற்படுத்த வேண்டும் எனச் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி: கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒசூர் அடுத்த மத்திகிரி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட சொர்ணபூமி லே அவுட் பகுதியில் வசித்துவந்த மோகன் (50) என்பவர் இணையவழி வர்த்தகம் மேற்கொண்டு வந்தார்.

தொழிலில் இழப்பு

கிருஷ்ணகிரி அடுத்த ஆலங்காயம் இவரது சொந்த ஊரானலும் ஒசூர் பகுதியிலேயே தங்கி தொழில் செய்துவந்துள்ளார். தொழில் போட்டி காரணமாக மோகன் வங்கி உள்ளிட்ட கடன் நிறுவனங்களில் கடன் பெற்று தொழிலை விரிவுப்படுத்தியுள்ளார்.

ஆனால், கரோனா முடக்கம் காரணமாக அவர் எதிர்பார்த்த அளவு வருவாய் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடன் அதிகரித்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்க, மனதளவில் பெரும் துயரத்திற்கு மோகன் தள்ளப்பட்டுள்ளார்.

இவருக்குப் பதில் இனி இவர்... பிரபல தொடரிலிருந்து வெளியேறிய 'புஷ்பா'!

எந்தவொரு நண்பர்கள், தெரிந்தவர்களின் அறிவுரை அல்லது ஆலோசனையைப் பெறாமல் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். இதற்கு தனது வீட்டில் உள்ள தாயார், மனைவி, மகள் என மூவரையும் சம்மதிக்கவைத்துள்ளார்.

குடும்பமே தற்கொலை

அதன்படி, மோகனின் தாயார் வசந்தா (61) வீட்டின் கீழ் தளத்தில் உள்ள படுக்கறையில் நஞ்சருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வீட்டின் மேல்தளத்தில் உள்ள படுக்கையறையில் மோகனின் மனைவி ரம்யா(36), அவரது 10 வயது மகள் அன்மயி ஆகிய இருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

மோகன் மட்டும் படுக்கையறையின் தரையில் தலை, முகம் முழுவதும் நெகிழி பையால் சுற்றப்பட்டு சினிமா பாணியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒசூர் காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான மத்திகிரி காவல் துறையினர் மோகனின் வீட்டை பார்வையிட்டனர். அதில், கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துக்கொள்வதாகக் கூறி எழுதிவைக்கப்பட்ட கடிதம் கிடைத்துள்ளது.

அழகால் ரசிகர்களை மயக்கும் மாளவிகா ஷர்மாவின் புகைப்படங்கள்

தற்கொலை செய்துகொண்ட நால்வரின் உடலைக் கைபற்றிய காவல் துறையினர், உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எண்ணங்களை போக்க தக்க விழிப்புணர்வு அரசு தரப்பில் ஏற்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.