கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரப்பர் இட்லியா?:ஆய்வு செய்த உணவுபாதுகாப்பு அலுவலரின் விளக்கம்

author img

By

Published : Jan 11, 2023, 7:48 PM IST

ரப்பர் இட்லி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததால் அதிருப்தி

கிருஷ்ணகிரி அருகே ஓசூரில் ரப்பர் இட்லி விற்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டினையடுத்து, உணவக உரிமையாளர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து இட்லி தயாரிக்கும் முறையினை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரப்பர் இட்லியா?:ஆய்வு செய்த உணவுபாதுகாப்பு அலுவலரின் விளக்கம்

கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சி, இராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல உள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே உள்ளதாகவும் கூறி வாடிக்கையாளர்கள் உணவக உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த உணவகத்தில் கடந்த சில மாதங்களாகவே, இது போன்ற இட்லிகள் விற்பனை செய்து வருகின்றனர் என்றும்; இந்த இட்லிகளை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது எனவும்; சிறு குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறி அவர்கள் உணவகம் நடத்துபவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது, 'அவர்கள் தங்களுக்கு வேறு இடத்திலிருந்து இட்லி குறைந்த விலைக்கு வருவதாகவும்; அதனை தாங்கள் சட்னி, சாம்பாரோடு விற்பனை செய்து வருகிறோம். இந்த இட்லியில் ஆமணக்கு விதை மட்டுமே கலக்கப்படுகிறது' எனத் தெரிவித்தனர். ஆனாலும், வாடிக்கையாளர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

கடையில் இட்லி சாப்பிட வந்த வாடிக்கையாளர் கூறும் போது, 'தொடர்ந்து இது போன்ற இட்லிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த இட்லிகளை விற்காதீர்கள் என்று கூறியும் தொடர்ந்து விற்று வருகின்றனர். ஓசூர் பகுதிகளில் உள்ள ஏராளமான உணவகங்களில் இதுபோன்ற ரப்பர் இட்லிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும், எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் விற்கப்படும் இட்லியின் தரம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த சம்பவம் குறித்தும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்’ எனத் தெரிவித்தனர்.

இதுக்குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் கூறுகையில், ’ரப்பர் இட்லி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில் உணவகத்தில் ஆய்வு செய்தேன். இட்லி சானசந்திரம் பகுதியில் தயாரித்து ஏராளமான கடைகளுக்கு சப்ளை செய்வது தெரியவந்தது.

அங்கு இட்லி தயாரிக்கும் முறை, இட்லி மாவினை பரிசோதித்து, ஆய்வுகளுக்காக அனுப்பி வைத்துள்ளோம். ஆய்வில் ஏதேனும் கலப்பிடம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முடிவுகள் வரும் வரை இட்லி தயாரிக்கவோ, விற்கவோ வேண்டாமென நிறுத்தி உள்ளோம்' என்றார்.

இதையும் படிங்க:அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு சொந்த செலவில் ஸ்மார்ட் கிளாஸ் - English sir-க்கு குவியும் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.