திமுக நிர்வாகியை கட்டி வைத்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை!
Published: May 23, 2023, 9:46 PM


திமுக நிர்வாகியை கட்டி வைத்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை!
Published: May 23, 2023, 9:46 PM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் திமுக நிர்வாகியை கட்டி வைத்துவிட்டு ஜேசிபி இயந்திரம் கொண்டு கடையை சுக்குநூறக நொறுக்கி, சுமார் ரூபாய் ஒன்றரை கோடி மதிப்புள்ள பொருள்களை அள்ளி சென்ற ரவுடி கும்பல்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் நீண்ட காலமாக புரோட்டா கடை மற்றும் துணிக்கடை நடத்தி வருபவர் திமுகவின் முக்கிய பிரதிநிதியாக உள்ள சீதா முருகன். இவர் இந்த கடையை ரூபாய் 35 லட்சத்திற்கு குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். 2023 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இந்த கடையின் குத்தகை முடியும் நிலையில் கடை உரிமையாளரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது உரிமையாளர் கடையை விற்பனை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
ஆனால், 35 லட்சம் ரூபாய் குத்தகை பணத்தை கடை நடத்தி வந்த சீதா முருகனுக்கு கடிடத்தின் உரிமையாளர் ராபின்சன் கொடுக்காமல் கடையில் இருந்து சீதா முருகனை வெளியேர சொல்லி இருக்கிறார். பணத்தை கொடுக்காத காரணத்தால் கடையில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து கடையை நடத்தி வந்துள்ளார்.
இந்த பிரச்சனை குறித்த புகார் வடசேரி காவல் நிலையத்தில் உள்ளது. மேலும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை
மர்ம நபர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு கடையை இடித்து கொண்டிருப்பதாகவும் உள்ளிருக்கும் பொருள்களை எடுத்து வண்டியில் ஏற்றி கொண்டிருப்பதாகவும் கடையை நடத்தி வந்த சீதா முருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலை அறிந்த சீத்தா முருகன் கடைக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கும்பல் அவரை பிடித்து வைத்ததுடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் கையில் இந்த தங்க கை செயின் (பிரேஸ்லெட்) மோதிரம் போன்றவற்றையும் எடுத்துக் கொண்டு அவர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியும் உள்ளனர்.
மேலும் கடையில் இருந்த சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிமணிகளையும் மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் எடுத்துச் சென்றனர். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த காவல் துறையினார் சம்பவ இடத்திற்கு வேண்டும் என்றே கால தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.
காவல் துறையினார், தகவல் தெரிந்ததும் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் பொருள்களையும் பணத்தையும் பாதுகாத்து இருக்கலாம் என கடையை நடத்தி வந்த சீதா முருகன் மனம் உடைந்து தெரிவித்தார். அதிகாலை நேரத்தில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் கட்டிடத்தில் உரிமையாளர் ராபின்சன் மற்றும் அவரது அடியாட்கள் வந்து ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கடையை அடித்து உடைத்து சென்றுள்ளது குறித்து வடசேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சமீப காலங்களாக வழக்கறிஞர்கள் அவர்களோடு ரவுடிகளை இணைத்துக்கொண்டு பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளை நடத்தி வருவது கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. சட்டத்தை படித்த வழக்கறிஞர்கள் இப்படி செயல்படுவது இந்த சமுதாயத்திற்கு நல்லதாக இல்லை. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் திமுக ஆட்சியில் திமுக வினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் பொது மக்களின் நிலை என்ன என்ற கேள்வி இப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: கூகுள் லொகேஷன் பேட்ஜ் பின் பெற்ற உலகின் 2ஆவது நபர் - சாமானிய இளைஞரின் வெற்றிக்கதை!
