ஸ்ரீ ராமானுஜர் திருவுருவ சிலை திறப்பு விழா - வாழ்த்து செய்தி அனுப்பிய பிரதமர்

author img

By

Published : Nov 26, 2022, 8:16 AM IST

Etv Bharat

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட கருங்கல்லால் ஆன எட்டரை அடி உயர ஸ்ரீ ராமானுஜர் திருவுருவ சிலை திறப்பு விழாவிற்குப் பிரதமர் அனுப்பிய வாழ்த்து செய்தி விழாவில் திரையில் திரையிடப்பட்டது.

கன்னியாகுமரி : ஸ்ரீ ராமானுஜருக்கு திருவுருவ சிலையைக் கன்னியாகுமரியில் நிறுவ கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் முடிவு செய்து, அதன் திறப்பு விழா கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா சார்பாக ஸ்ரீ ராமானுஜர் சாம்ராஜ்ய மகோத்சவம் என்ற நிகழ்ச்சி கேந்திராவில் உள்ள சபா மண்டபத்தில் நேற்று (நவ.24) தொடங்கியது.

முதல் நாள் நிகழ்ச்சியான நேற்று தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியான இன்று (நவ.25) தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக மடாதிபதி சுவாமிகள் கலந்து கொண்டனர்.

சபா மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு வேள்வி பூஜைகளும் நடைபெற்றது. அதற்கான ப்ரதிஷ்டாபனஹோம பூஜைகள் மேல்கோட்டை ஸ்ரீயது கிரி யதி ராஜமடம் 41 ஆவது பட்டம் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ யது கிரியதி ராஜநாராயண ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் தலைமையில் சிலை திறப்பு மற்றும் ஸ்ரீ ராமானுஜர் சாம்ராஜ்ய மகோத்சவம் மாநாடு நடைபெற்றது.

பெங்களூரில் இருந்து கொண்டுவரப்பட்ட கருங்கல்லால் ஆன நான்கு அரை அடி உயரச் சிலை இரண்டு அரை அடி உயரத் தாமரை வடிவ பீடத்தின் மீது ஒன்றரை அடி உயர சிமெண்ட் காங்கிரீட் தளத்தில் நிறுவப்படுகிறது. சிலையில் மொத்த உயரம் எட்டரை அடி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ராமானுஜர் திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கு பிரதமர் அனுப்பிய வாழ்த்து செய்தி விழாவில் திரையில் திரையிடப்பட்டது.

ஸ்ரீ ராமானுஜர் திருவுருவ சிலை திறப்பு விழா

இதையும் படிங்க: வீடியோ; பெண்கள் எதையும் அணியாமலேயே அழகாக இருப்பார்கள் - பாபா ராம்தேவ் சர்ச்சை கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.