தாய், மகள் இரட்டை கொலை வழக்கு - ஒருவர் கைது

author img

By

Published : Jun 23, 2022, 10:34 AM IST

தாய் மகள் இருவரையும் கொன்ற இரட்டை கொலை வழக்கில் குற்றவாளி கைது

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே தாய், மகள் இரட்டை கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி: வெள்ளிசந்தை அருகே முட்டம் மீனவ கிராமத்தினை சேர்ந்தவர் அன்றோ சகாயராஜ். இவருக்கு மனைவி பவுலின் மேரி வயது (48) மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இரு மகன்களும் சென்னையில் படித்து வருகின்றனர். அன்றோ சகாயராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பவுலின் மேரி அவரது தாய் தெரசம்மாளுடன் வயது (82) முட்டத்தில் வசித்து வந்தார். அவர்களது உறவினர் பவுலின் மேரியை செல்போனில் தொடர்பு கொண்ட போது பதில் இல்லாததால் நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு மின்சார இணைப்பு பெட்டி உடைக்கபட்டு இருந்ததை கண்டு முன் பக்க கதவினை உடைத்து சென்று பார்த்ததில் வீட்டில் பவுலின் மேரி மற்றும் அவரது தாய் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். கொலையான தாய் மகள் ஆகிய இருவரும் அணிந்திருந்த தங்க நகைகளும் மாயமாகி இருந்தது.

இது குறித்து வெள்ளிசந்தை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை நடந்த 15 நாட்களில் தலைமறைவாக இருந்த கடியபட்டினத்தை சேர்ந்த அமல சுமன் கைது செய்யபட்டார்.

இது குறித்து மாவட்ட எஸ்பி ஹரி கிரண் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், தாய் மகள் இருவரை தாக்கி நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் 6 தனிப்படைகள் அமைக்கபட்டு குற்றவாளியை கைது செய்துள்ளோம் என்றும், வாக்குவாதத்தால் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை என விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும்படி மாவட்ட எஸ்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் களைகட்டிய கோடை சீசன்; 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.