TTF Vasan accident: சாகசம் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

TTF Vasan accident: சாகசம் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!
காஞ்சிபுரம் அருகே யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம்: யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே அவரது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
யூடியூப்-இல் உயர் ரக இருசக்கர வாகன சாகசங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்த டிடிஎஃப் வாசன், இன்று (செப்.17) சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் சாகசம் மேற்கொண்டபோது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. யூடியூப் பக்கத்தில் இருசக்கர வாகன சாகச வீடியோக்களை பதிவிட்டு இவர் பிரபலமடைந்தார்.
மேலும், அவ்வப்போது இருசக்கர வாகன சாகத்தில் ஈடுபடுவதால் போலீசில் சிக்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தற்போது இவர் இயக்குனர் செல்லம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது விபத்தில் சிக்கியுள்ள இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
