தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்து - ஊராட்சிமன்ற தலைவர் அஜய்குமார் கைது

author img

By

Published : Sep 30, 2022, 9:16 PM IST

Etv Bharat

தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்து சம்பவத்தில் ஊராட்சி தலைவரும் , முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளருமான அஜய்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கத்தில் கடந்த 28ஆம் தேதி மாலை சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர். இதில் ஜீவானந்தம், அமோத்குமார், சந்தியா ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து ஒரகடம் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார், அவரது மனைவி சாந்தி, ஜீவானந்தம், மோகன்ராஜ், பொன்னிவளவன் ஆகிய 5 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தேவரியம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவரும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளருமான அஜய்குமாரை ஒரகடம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமைறைவாக உள்ள அஜய்குமாரின் மனைவி சாந்தி மற்றும் பொன்னிவளவனை தேடி வருகின்றனர்.

இவ்வழக்கில் ஏற்கனவே மோகன்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிங்க: தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.