நோயாளிகளை கண்காணிக்கும் புதிய ஆடை கண்டுபிடிப்பு - மாணவிகள் சாதனை

author img

By

Published : Sep 21, 2019, 7:42 PM IST

ஈரோடு: நோயாளிகள், முதியவர்களின் உடல்நிலையை கண்காணிக்கும் சென்சார் பொருத்தப்பட்ட ஆடையை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்து அசத்தியதோடு, சர்வதேச போட்டியில் முதல் பரிசான ஆயிரம் டாலர் ரொக்கத்தையும் வென்றுள்ளனர்.

இன்றைய பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்திலுள்ள நோயாளிகள், முதியவர்கள், மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்காணிப்பதும், பராமரிப்பதும் பலருக்கு சவாலான காரியமாகவே உள்ளது.பலர் மாத கணக்கில் அவர்களுடன் கூட இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால், குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக அவர்களது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாகக் கண்காணித்து, தக்க சமயத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால் அது பலருக்கு சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

சாதனை மாணவிகள் பேட்டி

மேலும் தங்களது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களையோ, வலிகளையோ வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருப்போர் பலர் உண்டு. அத்தகையவர்களைத் துல்லியமாகக் கண்காணித்து, அவர்களது உடல் மாற்றங்களை சம்மந்தப்பட்டவர்களிடம் உரிய நேரத்தில் வழங்கக்கூடிய சென்சார் பொருத்தப்பட்ட ஆடையை சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவிகளான சுஷ்மிதா, சன்மதி, விஷாலி, தனஸ்ரீ ஆகிய நான்குபேரும் சேர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் இந்த ஆடையை வடிவமைத்துள்ளனர்.

இந்த ஆடையானது நோயாளிகள், முதியோர், ஆட்டிசம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் ரத்த அழுத்தம், இதய செயல்பாடு, சுவாச செயல்பாடு உள்ளிட்டவற்றை துல்லியமாகக் கண்காணிக்கும் என்று மாணவிகள் கூறுகின்றனர்.

இந்த ஆடையில் பொருத்தப்பட்டிருக்கும் மின்னணு சாதனமானது செல்போனில் இணைக்கக் கூடிய வகையில், வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம், இதனை அணிபவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும், குடும்ப மருத்துவர்களுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும் என்கின்றனர் இந்த சாதனை மாணவிகள். மேலும் இவர்களின் இந்த கண்டுபிடிப்பானது தாய்லாந்தில் நடைபெற்ற சர்வேதச போட்டியில் முதல் பரிசான ஆயிரம் டாலர்களையும் தட்டி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டி - தடம் பதித்த மாணவிகள்...

Intro:


Body:சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் நோய் நோயாளியை கண்காணிக்கும் ஆடையை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவிகள் மின்னியல் துறையைச் சார்ந்த மின்னியல் பொருட்கள் மேம்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவிகள் சுஷ்மிதா சன்மதி வைசாலி தனுஷ் ஆகிய நான்கு பேர் சேர்ந்து நோயாளியை கண்டுபிடிக்கும் நீ அமிகோ எனும் பிரத்தியேக ஆடையை வடிவமைத்துள்ளனர் இந்த ஆடையை நோயாளிகள் அணிவதன் மூலம் அவர்களின் உடல்நிலை இதயத்துடிப்பு வெப்பநிலை ரத்த அழுத்தம் சுவாசம் ஆகியவை ஆடையில் உள்ள சென்சார்கள் மூலம் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் நோயாளிகளின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை மருத்துவர்கள் எளிதாக கண்டறிந்து விரைந்து சிகிச்சை அளிக்க முடியும் இந்த ஆடையை முதியோர் ஆண்டி சாங் நோயால் பாதிக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என மாணவிகள் தெரிவித்தனர் தாய்லாந்து நாட்டில் போஜ்புரி ஸ்டாம்போர்டு சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்வேறு நாடுகளைச் சார்ந்த 36 குழுக்கள் படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன இதில் பண்ணாரிஅம்மன் கல்லூரி மாணவிகளுக்கு முதல் பரிசாக ஆயிரம் டாலர் ரொக்கமாக வழங்கப்பட்டது சர்வதேச விருது பெற்ற மாணவிகளை கல்வியின் கல்லூரி நிர்வாகம் பாராட்டி வருகிறது


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.