ஆசனூரில் கனமழை - தேசிய நெடுஞ்சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு

ஆசனூரில் கனமழை - தேசிய நெடுஞ்சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு
ஆசனூரில் கனமழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் இன்று மாலை நேரத்தில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மலைப்பகுதியில் பல்வேறு ஓடைகளில் பாய்ந்தோடிய வெள்ளம், ஆசனூர் பள்ளத்தில் கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலத்தை மூழ்கியபடி சென்றது.
இதனால் தமிழ்நாடு கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி சிறு வாகனங்கள் வெள்ளம் வடியும வரை காத்திருந்தன. அரேப்பாளையம், பங்களாதொட்டி, கோட்டாடை பகுதியிலும் தாளவாடியில் கும்டாபுரம்,பாரதிபுரம், ஓசூர், சிக்கள்ளி பகுதியிலும் மழை கொட்டித்தீர்த்தது.
இதையும் படிங்க: Video:கொடைக்கானலில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கைப்பாதிப்பு
