ஈரோடு மஞ்சள் விற்பனைக் கூடத்தில் இன்றைய விலை!

ஈரோடு மஞ்சள் விற்பனைக் கூடத்தில் இன்றைய விலை!
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்றைய மஞ்சள் விலையை பார்க்கலாம்.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மே 11ஆம் தேதி இன்று மொத்தமாக 1569 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன, ஏலத்தில் 836 மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது. விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலை ரூ.5,709 ஆகும். அதிகபட்சமாக ரூ.8,009 வரை ஏலம் சென்றது.
கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலை ரூ.5,389, அதிகபட்ச விலை ரூ.6,609 வரை விலை சென்றது. இன்று நடைபெற்ற ஏலத்தில் நேற்றைய விலையை விட பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் ஏற்படாமல் விற்பனை நடைபெற்றது.
இதையும் படிங்க:பலத்த சூறைக்காற்று: அறுவடைக்கு தயாராக இருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் செவ்வாழைகள் நாசம்
