தரமற்ற கட்டுமானப் பணியால் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

author img

By

Published : Sep 27, 2022, 10:49 PM IST

தரமற்ற கட்டுமானப் பணியால் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

தரமற்ற கட்டுமானப் பணியால் உக்கரம் மில்மேடு அரசு உயர்நிலைப்பள்ளி கட்டப்பட்டு சில நாள்களிலேயான சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் மில்மேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவியர்கள் படித்து வருகினறனர். இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவ, மாணவர்கள் பாதுகாப்பு கருதி ரூ.46 வட்சம் மதிப்பில் 630 மீட்டர் சுவர் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பள்ளியில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மீதமுள்ள சுற்றுச்சுவரும் தரமின்றி இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வேகாத செங்கல், குறைந்த சிமெண்ட் உடன் கலவையை என்று தரமற்ற முறையில் வேலைகள் நடப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கேசிபி இளங்கோ கூறுகையில், மாணவ, மாணவியர் பயிலும் பள்ளி சுற்றுச்சுவர் தரமில்லாமல் இருப்பதை ஆய்வு மேற்கொண்டதில் உறுதிபடுத்தப்பட்டது.

தரமற்ற கட்டுமானப் பணியால் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

ஒப்பந்த தாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து அங்கு வந்த பவானிசாகர் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.பண்ணாரி, தரமற்ற சுற்றுச்சுவரை ஆய்வு செய்து மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அளித்தார்.

இதையும் படிங்க: திருப்பதி ஏழுமலையானுக்கு 10 டன் பூக்களின் மாலை... ஈரோட்டில் கல்லூரி மாணவர்கள் கோர்ப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.