கொடைக்கானல் 60-வது மலர் கண்காட்சி.. வண்ணமயமாக தயாராகும் பிரையண்ட் பூங்கா!

author img

By

Published : Nov 30, 2022, 7:36 PM IST

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர 4000 டேலியா மலர் பணி தீவிரம்

கொடைக்கானலில் கொல்கத்தாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 4000 டேலியா மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிகள் பிரையண்ட் பூங்காவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் முக்கிய சுற்றுலா பகுதியாக பிரையண்ட் பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது 60வது மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடவு பணியில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கொல்கத்தா பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 40 வகையான பல வண்ணங்களில் உள்ள 4,000 டேலியா மலர் நாற்றுக்கள் தற்போது தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர 4000 டேலியா மலர் பணி தீவிரம்

மேலும் மண் மற்றும் உரங்கள் வைத்து குடில்களில் வைத்து பராமரிக்கப்படும். இந்த செடிகள் ஜனவரி மாதம் நடவு செய்யப்படும் எனவும் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த மலர்கள் வரும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூத்துக் குலுங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'சிற்பி' திட்டம் இனி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.