Sexual Harassment cases: விரைவில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை

author img

By

Published : Nov 23, 2021, 6:00 AM IST

Sexual Harassment cases  R Sakkarapani  I Periyasamy  minister i periyasamy warns sex offenders  dindigul news  dindigul latest news  திண்டுக்கல் செய்திகள்  அண்மை செய்திகள்  பாலியல் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை  ஐ பெரியசாமி  ஆர் சக்கரபாணி  பாலியல் குற்றவாளிகளை எச்சரித்த ஐ பெரியசாமி

பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்: மாவட்ட வன அலுவலகத்தில், மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட வனத் துறை மற்றும் வேளாண் உழவர் பாதுகாப்புத் துறை சார்பில் நேற்று (நவம்பர் 22) நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் வனத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள், வனத் துறை அலுவலக வளாகத்தில், மரக்கன்றுகளை நட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். இதில் மாவட்ட ஆட்சியர் விசாகன், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் வேலுசாமி, வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் காந்திராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய ஐ. பெரியசாமி

கடும் நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய ஐ. பெரியசாமி, “பசுமைப் போர்வைத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டுவருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டரை லட்சம் மரக்கன்றுகளை வழங்கும் திட்டம் இன்று (நவம்பர் 22) தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்கள், கல்லூரி பள்ளி மாணவிகள், குழந்தைகள் நலனில் அதிக அக்கறை கொண்டது. பெண்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கும்.

கொடைக்கானல் கீழ் மலை பகுதியில் காட்டு யானைகளால் பயிர்களுக்கும் மனித உயிர்களுக்கும் சேதம் ஏற்படாத வண்ணம் விரைவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விரைவில் வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதிக்கு ஆய்விற்காக வர உள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கூட்டுறவுத் துறை சார்பில் ஐந்தாயிரம் கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் மாதத்திற்குள் பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த ஆர்.கே. சுரேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.